பெருமழை தொடர்கிறது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கிழக்கிலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் கடந்த ஒருவாரகாலமாகத் தொடர்ந்து பெய்துவரும் பெருமழை காரணமாகப் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில், ஆறுகள், குளங்கள் நிரம்பி வழிவதுடன், பல பிரதேசங்களிலும் தாழ்ந்த பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளப்பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அன்றாட தொழில் துறைகள் பலவும் தொடர் மழையால் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தின் முக்கிய தொழிலான கடற்றொழில் வெகுவாகப்பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மீன் உட்பட கடல் உணவுகளுக்குப் பெரும் தட்டுப்பாடும் விலை உயர்வும் ஏற்பட்டுள்ள அதேவேளை கடற்றொழிலையே நம்பி வாழும் கடற்றொழிலாளர்கள் நாளாந்த வருமானத்தை இழந்து கஷ்ட நிலைமைக்கும் உள்ளாகியுள்ளனர்.

இதே வேளை இந்த மாவட்டத்தின் விவசாயப் பிரிவுகள் வெள்ளக்காடாகவே காட்சியளிப்பதுடன், காரைதீவில் இந்து ஆலயம் ஒன்றும் மழைவெள்ளத்தால் சூழப்பட்டுள்ள காட்சியையும் காண முடிகின்றது.

இந்த அடைமழை மேலும் தொடருமானால் வெள்ளப்பாதிப்பு அதிகரிப்பதுடன், மக்கள் அவலமும் அதிகரிக்குமெனக் கவலை தெரிவிக்கபடுகின்றது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கு அரசு முன்வர வேண்டுமென கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

பெருமழை தொடர்கிறது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House