தலதா மாளிகை வழிபாட்டில் ஆசீர்வாதம் பெற்ற பிரதமர் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

பிரதமர் மஹிந்த ராஜபக் கண்டி தலதா மாளிகைக்கு ஞாயிற்றுக்கிழமை (16.01.2022) விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார். அங்கு அவர் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல அவர்களினால் வரவேற்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து பிரதமர் அவர்கள் மல்வத்து மஹா விகாரை பீட மஹாநாயக்கர் வணக்கத்திற்குரிய திப்படுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.

அனுசாசனத்தை தொடர்ந்து வணக்கத்திற்குரிய தேரர் அவர்கள் கௌரவ பிரதமருக்கு புத்தர் சிலையொன்றை பரிசளித்தார்.

வழிபாட்டில் கௌரவ பிரதமருடன் மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே, இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்தே, பாராளுமன்ற உறுப்பினர்களான வசந்த யாப்பா பண்டார, குணதிலக ராஜபக்ஷ, உதயன சாமிந்த கிரிந்திகொட, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல உள்ளிட்ட மக்கள் பிரதிநிகள் பலர் கலந்து கொண்டனர்.

தலதா மாளிகை வழிபாட்டில் ஆசீர்வாதம் பெற்ற பிரதமர் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House