சேதன பசளையைக் கொண்டு உற்பத்தி செய்த சிறந்த விவசாயிகள். | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மன்னார் மாவட்ட செயலகத்தின் அலுவலகர் நலன்புரிச் சங்கத்தினரால் வருடந்தோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் உழவர் கௌரவிப்பு விழா இவ் நடப்பு வருடத்திலும் (2022) முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இவ் வருடம் நஞ்சற்ற இயற்கை பசளையைக் கொண்டு விவசாயத்தை மேற்கொண்டு உற்பத்தியில் ஈடுபட்ட சிறந்த விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

மன்னார் மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்தும் தலா ஒருவர் வீதம் தெரிவு செய்யப்பட்டு மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தலைமையில் நடைபெற்ற விழாவில் இவ் விவசாயிகள் கௌரவிக்கப்பட்டனர்.

மடு பிரதேச செயலகப் பிரிவில் ம.ஜோண் குணசீலன்,

மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் ஆரோக்கியம் எஸ்தாக்கி பிகிறாடோ

நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் ஏ.செபஸ்ரியம்மா

முசலி பிரதேச செயலகப் பிரிவில் சேகு முகமட் எஹியாகான்

மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் வைத்திலிங்கம் மகேந்திரன்

ஆகியோரே தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்ட விவசாயிகளாவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சேதன பசளையைக் கொண்டு உற்பத்தி செய்த சிறந்த விவசாயிகள். | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House