கொவிட் தொற்று நோய் அதிகரிக்கும் மன்னார் மாவட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மன்னார் மாவட்டத்தில் கொவிட் தொற்று நோய் அதிகரித்து வருகின்றது. வியாழக்கிழமை (27.01.2022) 17 பேர் கொவிட் தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ரி.வினோதன் தனது நாளாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கொவிட் சம்பந்தமாக நாளாந்த அறிக்கையில் வைத்திய கலாநிதி ரி.வினோதன் தெரிவித்திருப்பதாவது;

இனம் காணப்பட்டுள்ள 17 கொவிட் தொற்றாளர்களில்;

மன்னார் பொது வைத்தியசாலையில் 11 பேரும், வங்காலை, விடத்தல்தீவு வைத்தியசாலைகளில் தலா 2 பேரும். முருங்கன். பேசாலை வைத்தியசாலைகளில் தலா ஒருவருமே இத் தொற்று நோய்க்கு உள்ளாகியவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

ஆகவே இத் தொகையுடன் மன்னார் மாவட்டத்தில் ஜனவரி மாதம் (01.2022) கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரைக்கும் மன்னார் மாவட்டத்தில் முதலாவது தடுப்பூசி 81,338 பேருக்கும், இரண்டாவது தடுப்பூசி 75,855 பேரும், பூஸ்டர் தடுப்பூசி 22,789 பேருக்கும். பாடசாலை மாணவர்களுக்கு 11,220 பேருக்கும், பாடசாலையைவிட்டு குறிப்பிட்ட வயதில் விலகியவர்களுக்கு 1701 பேருக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று நோய் அதிகரிக்கும் மன்னார் மாவட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House