கவலையினத்தால் வயிற்றினுள் விடப்பட்ட கோஸால் உயிரிழந்த பெண் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாந்தி எடுத்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணின் வயிற்றுக்குள் கோஸ் (gauze) துணி பழுதடைந்து கிருமித் தொற்று ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாக்கருவீதி, கரவெட்டி கிழக்கைச் சேர்ந்த மனோன்மணி குல வீரசிங்கம் (வயது- 60) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை(10) வாந்தி எடுத்த நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (11)பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அன்று இரவு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டார். உடற்கூற்றுப் பரிசோதனையில் அவரின் வயிற்றுக்குள் கோஸ் (gauze) துணி பழுதடைந்து கிருமித் தொற்று ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப் பெண் கடந்த வருடம் 12ஆம் மாதம் 10 ஆம் திகதி தனியார் மருத்துவமனை ஒன்றில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் அச் சத்திரசிகிச்சையின் போதே கோஸ் (gauze) துணி வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கவலையினத்தால் வயிற்றினுள் விடப்பட்ட கோஸால் உயிரிழந்த பெண் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House