கடிதத்தின் மூலம் இந்தியாவை வைத்து தீர்வை அடைய முயற்சிக்கின்றோமா? - சித்தார்த்தன் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இந்தியப் பிரதமருக்கான கடிதத்தின் மூலம் இந்தியாவை நாங்கள் பயன்படுத்தி தீர்வை அடையவே முயல்கிறோம் என்று புளொட்டின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான த சித்தார்த்தன் யாழ்ப்பாணத்தில் இருந்து ஒலிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சியின் ஸ்பொட்லைற் நிகழ்வுக்கு அவர் அளித்த நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“ராஜபக்ஷ அரசாங்கத்தை எப்படி கையாள வேண்டும் என்பதற்காக இந்தியா தமிழ் அரசியலைக் கையாளும். பூகோள அரசியலுக்கு ஏற்றபடி சீனாவின் வருகை சீனத் தூதுவரின் வடக்கு வருகை பூகோள அரசியலின் நெருக்கடி என்பவற்றால் எப்போதும் இலங்கையை தன் பிடிக்குள் வைத்திருப்பதற்காக இந்தியா 13 குறத்து பேசுகிறதா அல்லது இதற்காகதான் தமிழ் தலைவர்களை வைத்திருக்கிறார்களா என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளதே?”, என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சித்தார்த்தன் எம். பி.,

“இதை மறுபக்கமாகவும், பார்க்கலாம் அல்லவா? இலங்கை அரசாங்கத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் இருக்கக்கூடிய முறுகல் நிலை, சீனா இங்குவந்துள்ள நிலைமை என இந்த நிலைமைகளில் இந்தியாவை பாவிக்க வேண்டும் என்று நாங்கள் தமிழ் தலைவர்கள், நானோ, செல்வமோ, விக்னேஸ்வரன் ஐயாவோ மற்றத் தலைவர்களோ யோசித்திருக்கலாம் அல்லவா?

13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாது செய்ய வேண்டும் என்ற நிலை வருகிறது. புதிய அரசமைப்பு பற்றி அரசாங்கம் சிந்தித்து வருகின்றது. 13ஆவது திருத்தச் சட்டம் இருந்தால் மட்டுமே இந்தியா தலையிட முடியும். இதன் மூலமே தமிழர்கள் தீர்வை அடைய முடியும். புதிய அரசமைப்பு வந்தால் இந்தியா அதில் தலையீடு செய்ய முடியாது என்றும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒளிபரப்பான ஸ்பொற் லைற்றில் கூறினார்.

கடிதத்தின் மூலம் இந்தியாவை வைத்து தீர்வை அடைய முயற்சிக்கின்றோமா? - சித்தார்த்தன் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House