கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவுக்கு இந்தியர்களுக்கு அனுமதி இல்லை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவுக்கு இம்முறை இந்தியர்களுக்கு அனுமதி இல்லை எனவும் மட்டுப்படுத்தப்பட்ட இலங்கையர்களை அனுமதிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ். கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம், 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட்டுள்ளதென கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய அருட்தந்தை வசந்தன் அடிகளார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

கொரோனா பேரிடர் நிலைமை காரணமாக இந்திய பக்தர்களுக்கு இம்முறையும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த 500 பேர் மட்டுமே கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் திருவிழாவில் பங்கேற்கும் அனைவரும் பூஸ்டர் டோஸையும் பெற்றிருக்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

கச்சதீவு திருவிழா தொடர்பில் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவுக்கு இந்தியர்களுக்கு அனுமதி இல்லை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House