ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தை நிச்சயம் உருவாக்குவோம். சூளுரைத்த சஜித் பிரேமதாஸ | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தை நிச்சயம் உருவாக்குவோம். சூளுரைத்த சஜித் பிரேமதாஸ | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ

இந்த அரசாங்கத்தால் திட்டமிட்டு நிறுத்தப்பட்ட வீடுகள் மாத்திரமல்லாது அனைத்து மக்களினதும் வீடற்ற பிரச்னையை தீர்ப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ புதுக்குடியிருப்பில் மக்கள் மத்தியில் சூளுரைத்தார்.

வடக்கு மாகாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சஜித் பிறேமதாஸ நேற்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கெடுத்தார்.

நேற்று திங்கட்கிழமை முற்பகல் 11 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட வேணாவில் பகுதியில் மக்கள் சந்திப்பு ஒன்றில் சஜித் பிரேமதாஸ கலந்து கொண்டார்.

வேணாவில் முத்துமாரி அம்மன் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற இந்த மக்கள் சந்திப்புக்கு வருகை தந்த சஜித் பிரேமதாஸ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;

முல்லைத்தீவு மாவட்டத்தில் நான் வீடமைப்பு அமைச்சராக இருந்த காலகட்டத்தில் கட்டம் கட்டமாக அனைத்து மக்களுடைய வீட்டு பிரச்னைகளையும் தீர்க்கும் முகமாக பல்வேறு வீட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வந்தேன்.

ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கம் குறித்த வீட்டுத்திட்டங்களை திட்டமிட்டு தடுத்து நிறுத்தியுள்ளது. ஆனால் நான் உங்களிடம் ஒன்றை தெரிவிக்க விழைகின்றேன். ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கமானது உருவாக்கப்படும் அதை நாங்கள் உருவாக்குவோம். அந்த அரசாங்கத்தில் இவ்வாறு நிறுத்தப்பட்ட வீட்டுப் பிரச்னைகள் மட்டுமல்ல, வீடற்ற அனைத்து மக்களினதும் வீட்டு பிரச்னையை நிச்சயமாக தீர்க்கப்போம் என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் லக்சயன் முத்துக்குமாரசாமியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த மக்கள் சந்திப்பில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்கிரமரத்ன, புத்திக பத்திரண மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி அமைப்பாளர்கள் உள்ளிட்ட அதிதிகள் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தை நிச்சயம் உருவாக்குவோம். சூளுரைத்த சஜித் பிரேமதாஸ | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House