எம்முடன் சேர்ந்து புதிய யுகத்தில் பயனியுங்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
எம்முடன் சேர்ந்து புதிய யுகத்தில் பயனியுங்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

“புதிய யுகத்தை நோக்கிப் பயணிக்கிறோம். அனைத்து மக்களும் எமது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயல்பட வேண்டும்”, என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அழைப்பு விடுத்துள்ளார்.

வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் நேற்று யாழ்ப்பாணத்தின் வடமராட்சி பகுதிகளுக்கு சென்றிருந்தார். இதன்போது, உடுப்பிட்டியில் மக்களுக்கு உதவித் திட்டம் வழங்கும் நிகழ்விலும் அவர் பங்கேற்றார்.

அங்கு உரையாற்றியபோது மேற்கண்டவாறு கூறியவை வருமாறு;

ஐக்கிய மக்கள் சக்தியானது எதிர்க்கட்சியாக இருந்து கொண்டும் அரசியலில் மட்டும் கவனம் செலுத்தாது மக்களின் சுகாதாரம், கல்வி போன்ற விடயங்களில் அவதானம் செலுத்தி வருகின்றது.

நாடு முழுவதிலும் உள்ள பின்தங்கிய வைத்தியசாலைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களையும், அத்துடன், வசதிகள் குறைந்த பாடசாலைகளுக்கு தேவையான நவீன கல்வி பயிலும் உபகரணங்களையும் வழங்கி வருகின்றோம். இவ்வாறான சேவையை வழங்குவதையிட்டு பெருமையடைகின்றேன். ஏனென்றால் எந்த ஓர் எதிர்க்கட்சியும் இவ்வாறு செயற்பட்டது கிடையாது.

எதிர்க்கட்சியாக உள்ளவர்கள் அரசியலில் மட்டும் கவனம் செலுத்துவார்கள். நாங்கள் ஒரு புதிய கட்சி. ஆனால், நாங்கள் புதிய யுகத்தை நோக்கி பயணிக்கிறோம். தற்போது மக்கள் அரசாங்கத்தை வெறுக்கின்றார்கள். ஏன் இவர்களுக்கு வாக்களித்தோம் என்று எண்ணும் அளவிற்கு நிலைமை காணப்படுகின்றது.

ஆனால், நாங்கள் எல்லாவற்றையும் உற்றுநோக்கி செயல்படுகின்றோம். எனவே, அனைத்து மக்களும் எமது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் புதிய யுகத்தை நோக்கி பயணிக்க முடியும் என்றார்.

எம்முடன் சேர்ந்து புதிய யுகத்தில் பயனியுங்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House