இலங்கையின் நடுத்தர தொழில் துறைகளை ஊக்குவிப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இலங்கையில் பொருளாதார அபிவிருத்திக்காக, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளை மேம்படுத்துவதற்கு, ஆசிய அபிவிருத்தி வங்கி ஒத்துழைப்பு வழங்கும் என்று அதன் உப தலைவர் சிக்ஷின் ஷென் தெரிவித்துள்ளார்.

நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நேரில் சந்தித்து உரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியில் செயல்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் வெற்றிக்கு, சிக்ஷின் ஷென் பாராட்டு தெரிவித்தார்.

அரச கூட்டுத்தாபனங்கள் பலவற்றை மறுசீரமைப்பதற்கான நிதி உதவிகளை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்பார்த்துள்ளது. அத்துடன், ஆசிய அபிவிருத்தி வங்கியால், இலங்கைக்கு இவ்வாண்டில் 78.6 கோடி அமெரிக்க டொலர்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டை, 68 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளின் பங்குபற்றுதல்களுடன் இந்த ஆண்டு மே 02 முதல் 05ஆம் திகதி வரை இலங்கையில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை ஒட்டி வணிக மாநாடுகள் உள்ளிட்ட பல செயற்பாடுகளையும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய மற்றும் சர்வதேசப் பிரதிநிதிகள் 5,000 பேர் இதில் கலந்துகொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் தெரிய வருகின்றது.

இலங்கையின் நடுத்தர தொழில் துறைகளை ஊக்குவிப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
இலங்கையின் நடுத்தர தொழில் துறைகளை ஊக்குவிப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House