ஆழியவளையில் கரை ஒதுங்கியது மீனவ இளைஞனின்  சடலம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி கடற்ரொழிலுக்கு சென்று காணாமல் போனவர்களில் இளைஞன் ஒருவரின் சடலம் ஆழியவளை கடற்பகுதியில் நேற்று திங்கட்கிழமை(31) நண்பகல் கரையொதுங்கியுள்ளது.

வத்திராயன் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான பிறேம்குமார் மற்றும் அவரின் சகோதரியின் மகனான 21 வயதான தணிகைமாறன் ஆகிய இருவர் கடல் தொழிலுக்கு கடந்த 27ஆம் திகதி சென்ற நிலையில் கரை திரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மீனவர்கள் விளையாட்டு கழகத்தினர் இணைந்து கடற்பரப்பில் இரவு பகலாக பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அவர்களையோ, அவர்கள் பயணித்த படகினையோ கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அறுந்த வலைகள் மட்டுமே மீட்க்கப்பட்டிருந்தன.

அவர்களின் படகை இந்திய ரோலர் படகுகள் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என மீனவர்கள் குற்றம் சாட்டியிருந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை (31) நண்பகல் தணிகைமாறன் என்பவருடைய சடலம் ஆழியவளை கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கியுள்ளது. இது தொடர்பில் மருதங்கேணிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றவர் தொடர்பான தகவல் இதுவரை கிடைக்கவில்லை. தொடர்ந்தும் தேடுதல் நடைபெறுகிறது.

ஆழியவளையில் கரை ஒதுங்கியது மீனவ இளைஞனின்  சடலம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B