55 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இலங்கை கடற்பரப்பில் கைதான 55 இந்திய மீனவர்களை இன்று நிபந்தனையுடன் விடுதலை செய்தது ஊர்காவற்றுறை நீதிமன்றம்.

நெடுந்தீவு மற்றும் எழுவைதீவு அருகே கடந்த வருடம் டிசெம்பரில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 55 பேருக்கும் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாதகால சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இவர்களின் கைவிரல் அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டதுடன், 5 வருட காலத்தில் மீண்டும் இலங்கை பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டால் அவர்களை உடனடியாக கைது செய்வதற்கும் நீதிவான் கஜநிதிபாலன் உத்தரவிட்டார்.

ஊர்காவற்றுறை நீதிமன்றில் இந்த வழக்கு எடுக்கப்பட்ட நிலையில் இந்திய மீனவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் இலங்கை குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக இந்தியாவுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவும் நீதிவான் உத்தரவிட்டார்.

55 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House