4 சந்தேக நபர்கள் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

சுன்னாகம் பொலிஸ் பிரதேசம் மற்றும் கொடிகாமம் பொலிஸ் பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இயங்கும் விசேட புலனாய்வு பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் உடுவில் பகுதியைச் சேர்ந்த 22, 24 மற்றும் 26 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டது.

கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் 5ஆம் திகதி கொடிகாமம் பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மோட்டார் சைக்கிள் உரிமையாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதேபோல் கடந்த வருடம் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி உடுவில் அம்பலவாணர் வீதிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்து அங்குள்ள வீட்டின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் குறித்த திருடப்பட்ட இருந்த மோட்டார் சைக்கிள் பயன்படுத்தப்பட்டமை தெரியவந்தது.

அதேபோல் கடந்த வருடம் அம்பலவாணர் வீதி, உடுவில் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இந்த சந்தேக நபர்களுக்கு தொடர்புள்ளமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

4 சந்தேக நபர்கள் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House