17 ஆவது தேசிய மாநாடு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மௌலவி முபாரக் அப்துல் மஜீத்

இலங்கையிலுள்ள முஸ்லிம் கட்சிகளுள் ஒன்றான ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் 17 ஆவது தேசிய மாநாடு எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது.

கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தலைமையில், கிழக்கிலங்கையின் முக்கிய பிரதேசமான கல்முனை மாநகரில் இந்த தேசிய மாநாட்டை நடத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கல்முனை ஆஸா பிளாசா மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில் கொழும்பு, புத்தளம், மன்னார், பொலனறுவை, மட்டக்களப்பு, திருமலை, அம்பாறை, குருநாகல் உட்பட நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் கட்சியின் உயர்சபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

நாட்டின் இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்பவும், நாட்டின் சிறுபான்மையினர் சார்ந்தும் பலதீர்மானங்கள் மாநாட்டு தீர்மானங்களாக இந்த தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்படவுள்ளதாகவும், இந்த தேசிய மாநாட்டில் கலந்து சிறப்பிக்குமாறு ஏனைய முஸ்லிம் கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கும், ஏனைய கட்சிகளுக்கும் அழைப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கட்சித்தலைவர் மௌலவி. முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையினருடனும், சுகாதார வழிகாட்டுதல்களுடனும் மாநாடு நடைபெறவுள்ளது.
மேலும் இன்றைய நாட்டின் பொதுஜன பெரமுன அரசின் ஓர் பங்காளிக்கட்சியாகவும் மேற்படி ஐக்கிய காங்கிரஸ் கட்சி திகழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

17 ஆவது தேசிய மாநாடு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House