102 வயதைதான கிளிநொச்சி இரணைமடு குளம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 102ஆவது ஆண்டை முன்னிட்டு 102 பானைகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) பொங்கல் பொங்கப்பட்டது.

வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் இந்திய துணைத்துாதரகத்தின் பதில் துாதுவரின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

காலை 8.30 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில், முன்னதாக இரணைமடு நீர் தேக்கத்தின் கீழுள்ள வயலில் அறுவடை செய்த நெல் கதிர்கள் கனகாம்பிகை அம்மன் ஆலயத்துக்கு எடுத்து வரப்பட்டு விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து பொங்கல் விழா ஆரம்பமானது.

இந்நிகழ்வில் இந்திய துணை தூதரகத்தின் பதில் துாதுவர், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் திருலிங்கநாதன், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர்.

102 வயதைதான கிளிநொச்சி இரணைமடு குளம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
102 வயதைதான கிளிநொச்சி இரணைமடு குளம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House