வாகன விபத்தில் 22 வயதான இளைஞன் உயிரிழந்தார் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஊர்காவற்றுறை, பண்ணைப் பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த விபத்தில் 22 வயதான இளைஞரொருவரே உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

ஊர்காவற்றுறையிலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் பஸ் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட வேளை யாழ்ப்பாணத்திலிருந்து வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானார்.

விபத்தில் படுகாயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளை செலுத்தியவரே விபத்தில் உயிரிழந்தார். உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

வாகன விபத்தில் 22 வயதான இளைஞன் உயிரிழந்தார் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House