காணாமல்போன கடலில் காணாமல் போண மற்றவரின் சடலம் கரை ஒதுங்கியது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ். வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் கடற்றொழிலுக்குச் சென்று காணாமல்போன இருவரும் நேற்று சடலங்களாகக் கரையொதுங்கியுள்ளனர்.

வத்திராயன் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான பிறேம்குமார் மற்றும் அவரின் சகோதரியின் மகனான 21 வயதான தணிகைமாறன் ஆகிய இருவரும் கடந்த 27ஆம் திகதி கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில் கரை திரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மீனவர்கள், விளையாட்டுக் கழகத்தினர் ஆகியோர் இணைந்து வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் இரவு - பகலாக பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அவர்களையோ, அவர்கள் பயணித்த படகையோ கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. ஆனால், அறுந்த வலைகள் மட்டுமே மீட்கப்பட்டிருந்தன.

அவர்களின் படகை இந்திய ரோலர் படகுகள் மோதி விபத்துக்குள்ளாக்கி இருக்கலாம் என மீனவர்கள் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில் நேற்று நண்பகல் தணிகைமாறன் என்பவருடைய சடலம் ஆழியவளை கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கியது.

அதைத் தொடர்ந்து பிறேம்குமார் என்பவருடைய சடலம் கேவில் பகுதியில் கரையொதுங்கியது.

இது தொடர்பில் மருதங்கேணிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காணாமல்போன கடலில் காணாமல் போண மற்றவரின் சடலம் கரை ஒதுங்கியது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B