களைகட்டும் பொங்கல் திருநாள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

தைத்திருநாளாம், தைப்பொங்கல் தினத்தை நாளை 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொண்டாடுவதற்கு கிழக்கிலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தயாராகிவருகின்றனர்.

இதனையொட்டி கிழக்கின் முக்கிய நகரங்கள், வியாபார நிலையங்களில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

குறிப்பாக பொங்கலுக்குத் தேவையான பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் பொது மக்கள் ஆர்வம் காட்டிவரும் அதேவேளை புத்தாடைகள் வாங்குவதற்கென ஜவுளிக்கடைகளிலும் மக்கள் நிறைந்து காணப்படுகின்றனர்.

இதனால் பல நகரங்களிலும், பொதுச் சந்தைகளிலும் தைப் பொங்கள் வியாபாரம்களை கட்டியும் காணப்படுகின்றது
அத்துடன் பலபிரதேசங்களிலும் வீதியோர அங்காடி புடவை வியபாhரிகளும் அதிகரித்துள்ள நிலையில், அங்காடி வியாபாரிகளின் வியாபாரங்களும் களைகட்டியுள்ளது.

பெரும்பாலும் வெளிமாகாணங்களைச் சேர்ந்த அங்காடி ஜவுளிமற்றும் பாதரட்சைகள், அலங்காரப் பொருட்களை விற்பனை செய்யும் அங்காடி வியாபாரிகள் கிழக்கின் பல பகுதிகளுக்கும் படையெடுத்த வண்ணமுள்ளனர்.
இதேவேளை தைத்திருநாளையொட்டி பொங்கல் விழாக்களை இம்முறை சுகாதார வழிகாட்டுதல்களுக்கமைய தமிழ் பிரதேசங்களில் நடத்துவதற்கும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிழக்கின் முகக்pய நகரங்களுள் ஒன்றான கல்முனை மாநகரில் கல்முனை தமிழ் இளைஞர்சேனை பொங்கல் விழாவை நாளை 14 ஆம் திகதி வெகுவிமரிசையாக நடத்தவுள்ளது.

பாரம்பரிய தமிழர் பண்டபாட்டு நிழ்வுகளுடன், கல்முனை பழைய பேருந்து தரிப்பிடத்தில் அன்றைய தினம் காலை ஒன்பது மணிக்கு இந்த பொங்கல் விழா நடைபெறவுள்ளது.

களைகட்டும் பொங்கல் திருநாள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House