கட்டாக்காலிகள் தொல்லை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கிழக்கிலங்கையின் முகவெற்றிலை என முக்கியத்துவம் பெற்றவர்த்தக நகரான கல்முனை மாநகரசபை எல்லைக்குள் அண்மைக்காலமாகக் கட்டாக்காலி மாடுகளின் தொல்லையும், நடமாட்டமும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக கல்முனை பொதுச் சந்தைப் பகுதி உட்பட முக்கிய பகுதிகளில் இந்த கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டத்தால் பொது மக்கள், மற்றும் வியாபாரிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

அதேவேளை வாகனங்களில் பொது மக்கள் பயணிக்கும் சமயம் குறித்த கட்டாக்காலிமாடுகள் குறுக்கறுத்து நடமாடுவதால் வீதி விபத்துக்கள் ஏற்படவும் ஏதுவாக அமைகின்றது.

கல்முனை மாநகர சபை நகரில் கட்டாக்காலி ,மாடுகளின் தொல்லைகளை ஒழிப்பதற்கு பல்வேறு காலகட்டங்களில் கண்டிப்பான பால நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் அதனை முற்றாக ஒழிக்க முடியவில்லை.

எனினும் தற்சமயம் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டமும் தொல்லையும் வெகுவாக அதிகரித்துள்ளது.

பல முக்கிய இடங்களிலும் இவ்வாறான தொல்லை அதிகரித்துள்ளதால் சம்மந்தப்பட்ட மாநகர சபை அதிகாரிகள் உரிய நடவடிக்களை மேற்கொண்டு கட்டாக்காலி மாடுகளின் தொல்லையை முற்றாக ஒழிக்க முன்வரவேண்டுமென பொது மக்கள் கோருகின்றனர்.

கட்டாக்காலிகள் தொல்லை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House