'எளிமைமிகு பரிபாலக ஆளுமை' கைநூல் வெளியீடு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
'எளிமைமிகு பரிபாலக ஆளுமை' கைநூல் வெளியீடு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வட மாகாண சபையின் அவைத் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் எழுதிய 'எளிமைமிகு பரிபாலக ஆளுமை' என்ற கைநூல் வெளியீடு வெள்ளிக்கிழமை (07) பிற்பகல் 4 மணிக்கு நல்லை ஆதீன மண்டபத்தில் நடைபெற்றது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் பரிபாலகர் அமரர் இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் நற்செயற்பாடுகளை வெளிப்படுத்தும்விதமாக அமைந்துள்ள இந்த நூலின் வெளியீட்டுக்கு நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தலைமை தாங்கினார்.

யாழ். மாவட்ட இந்து அமைப்புகளின் ஒன்றிய செயலாளர் இ. இரத்தினசிங்கம் வரவேற்புரையும், நிகழ்வில் நல்லை சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை பிரதி அதிபர் செந்தமிழ் சொல்லருவி ச. லலீசன் ஆகியோர் கருத்துரைகளையும், யாழ். மாவட்ட இந்து அமைப்புகளின் ஒன்றிய நிர்வாக சபை உறுப்பினர் ச. லோகசிங்கம் நன்றியுரையும் ஆற்றினர்.

நூலின் முதல் பிரதியை நல்லூர் ஆலய தொண்டர் கண்ணன் நல்லை ஆதீன முதல்வரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கு கைநூல் இலவசமாக வழங்கப்பட்டது.

'எளிமைமிகு பரிபாலக ஆளுமை' கைநூல் வெளியீடு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House