உயிரிழந்த மாதகல் மீனவருக்கு நீதிகோரும் மக்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மாதகல் கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்த மீனவருக்கு நீதி கோரி அவரின் சடலத்துடன் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மாதகல் கடற்பரப்பில் கடந்த 10ஆம் திகதி இரவு கடற்தொழிலுக்கு சென்ற மீனவரின் படகு விபத்துக்கு உள்ளான நிலையில் சக மீனவர்களால் சடலமாக மீட்கப்பட்டார். இதில், மாதகல் குசுமன்துறையைச் சேர்ந்த 31 வயதுடைய சேர்ந்த திலீபன் என அழைக்கப்படும் எட்வர்ட் மரியசீலன் என்ற மீனவர் உயிரிழந்தார்.

கடற்படை படகு மோதியதாலே ஏற்பட்டது என உள்ளூர் மீனவர்கள் குற்றம் சாட்டிய நிலையில், கடற்படையினர் தமது படகு மோதவில்லை என மறுத்தனர். அத்துடன், இந்திய ட்ரோலர் படகு மோதி இருக்கலாம் எனத் தெரிவித்து இருந்தனர்.

இந்திய ட்ரோலர் படகுகள் கரையை அண்மித்து வர முடியாது எனவும், படகு விபத்து ஏற்பட்ட பகுதிக்கு ட்ரோலர் படகுகள் வருவதற்கான சாத்தியமே இல்லை என உள்ளூர் மீனவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையிலையே மீனவரின் உயிர் இழப்புக்கு நீதி கோரி ஊரவர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், உயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகளும் இன்று இடம்பெற்றிருந்தன.

உயிரிழந்த மாதகல் மீனவருக்கு நீதிகோரும் மக்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
உயிரிழந்த மாதகல் மீனவருக்கு நீதிகோரும் மக்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House