பதாகைகள் மீது தக்காளி பழத் தாக்குதல் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

தேனாரம் துயர் பகிரும் இணையத்தளம்

தமிழ் எம்.பிக்களின் பதாகைகள் மீது வவுனியாவில் அழுகிய தக்காளி பழங்கள் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமை தினமான சனிக்கிழமை (10) வவுனியா பிரதான தபாலகத்துக்கு முன்பாக 2120 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது தமிழ் எம்.பிக்கள் இலங்கை அரசுடன் பேசவேண்டாம், தமிழ் எம்.பிக்கள் இலங்கை அரசுடன் தனியாக பேச வேண்டாம் என்ற கோசங்களை எழுப்பியிருந்ததுடன், பதாதைகளையும் தாங்கியவாறு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தமிழ் எம்.பிக்களின் புகைப்படங்கள் தாங்கிய பதாதைக்கு அழுகிய தங்காளி பழங்களினால் எறிந்து தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

பதாகைகள் மீது தக்காளி பழத் தாக்குதல் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)