லஞ்ச ஊழலில் கைதான கிராம சேவகரைக் காட்டியவர் வீட்டை ஒருவழி பண்ணிய கிராமத்தவர் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஒரு கிராம அலுவலகர் கைது செய்யப்பட்டதின் எதிரொலியாக இதற்கு காரணகத்தா என தெரிவிக்கப்பட்ட ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து பொருட்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாக பொலிசில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இச் சம்பவம் வியாழக்கிழமை (18) மாலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக தெரிவிக்கப்படுவதாவது;

மன்னார் பிரதேச செயலகப் பிரிவின் நிர்வாகத்திலுள்ள ஒரு கிராமத்தில் கிராம அலுவலகர் ஒருவரை கொழும்பிலிருந்து வந்த லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் இச் சந்தேக நபரான கிராம அலுவலகர் லஞ்சம் பெற்றதாக தெரிவித்து வியாழக்கிழமை (18) கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

இதை கண்டித்து இக் கிராமத்திலுள்ள ஒருசிலர் கிராம அலுவலகரின் கைதுக்கு காரணகத்தாவாக இருந்ததாக தெரிவிக்கப்படும் அக் கிராமத்து நபரின் வீட்டுக்குள் புகுந்து வீட்டுப் பொருட்களுக்கு சேதம் விளைவித்ததாக பொலிசில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

பொலிசார் இது தொடர்பாக விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

லஞ்ச ஊழலில் கைதான கிராம சேவகரைக் காட்டியவர் வீட்டை ஒருவழி பண்ணிய கிராமத்தவர் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY