சர்வதேச துடுப்பாட்ட மைதானம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ் மாநகர சபைக்குச் சொந்தமான கோண்டாவிலில் உள்ள நீர் விநியோக கிணறு அமைந்துள்ள 11 ஏக்கர் காணியில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பது தொடர்பில் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனால் யோசனையொன்று முன்வைக்கப்பட்டது.

யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று (12) இடம்பெற்றபோதே மாநகர முதல்வர் இதனை முன்வைத்தார்.

கோண்டாவிலில் உள்ள மாநகர சபையின் நீர் விநியோகக் கிணறு அமைந்துள்ள காணி சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைக்க பொருத்தமானது என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையோ நன்கொடையாளர்களோ முன்வந்தால் அதற்கான அனுமதியை வழங்கலாமா இல்லையா எனச் சபையின் சம்மதம் இதன்போது கோரப்பட்டது.

இது தொடர்பில் ஆராய கால அவகாசம் தேவை என மாநகர சபை உறுப்பினர்களால் கருத்து தெரிவிக்கப்பட்டதால் இவ்விடயத்தை அடுத்த கூட்டத்துக்கு ஒத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டது.

வடமாகாணத்தில் அமையக்கூடியதாக ஓர் சர்வதேச தரத்திலான துடுப்பாட்ட மைதானம் அமைக்க இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையால் மண்டைதீவுப் பகுதி முன்னர் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச துடுப்பாட்ட மைதானம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY