அரசாங்க ஊழியர்களுக்கு மாத்திரம் எரிபொருள் இன்று (06) வழங்கப்படும் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ்ப்பாணத்தில் இன்று 6ஆம் திகதி சனிக்கிழமை அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும். இதனால், இன்று சனிக்கிழமை (06) பொதுமக்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது என்று மாவட்ட அரச அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

அரச உத்தியோகத்தர்களும், ஓய்வூதியர்களும் அடையாள அட்டை, ஓய்வூதிய அடையாள அட்டையை உறுதிப்படுத்தலுக்காக கொண்டு செல்வது கட்டாயம்.

கியூ. ஆர். குறியீட்டு முறைமை அடிப்படையிலேயே எரிபொருள் விநியோகிக்கப்படும். கடந்த முதலாம் திகதி முதல் 5ஆம் திகதி வரை எரிபொருள் பெற்றவர்கள் இதற்குள் உள்வாங்கப்படமாட்டார்கள்.

ஒவ்வொரு எரிபொருள் நிலையத்திலும் 1500 மோட்டார் சைக்கிள்களுக்கு எரிபொருள் வழங்க முடியும். ஆண்கள், பெண்கள் தனித்தனியான வரிசைகளில் எரிபொருளை வழங்க எரிபொருள் நிலைய முகாமையாளர்களுக்கு அரச அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், மாவட்டத்தில் 23 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 6 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார உத்தியோகத்தர்களுக்கும், மிகுதி 17 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்க ஊழியர்களுக்கு மாத்திரம் எரிபொருள் இன்று (06) வழங்கப்படும் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY