யாழ்ப்பாணம் பி. சி. ஆர் சோதனையில் 99 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் நேற்று 282 பேரின் மாதிரிகள் பி. சி. ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், 99 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

ஆய்வறிக்கையின்படி, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் 18 பேர், கோப்பாய் பிரதேச மருத்துவமனையில் 18 பேர், உடுவில் மருத்துவ அதிகாரி பிரிவில் 17 பேர், ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனையில் 12 பேர், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் 4 பேர், சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் 2 பேர், சாவகச்சேரி மருத்துவ அதிகாரி பிரிவில் 2 பேர், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒருவர், வீனஸ் ஹொஸ்பிற்றலில் ஒருவர் என 75 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

வவுனியா மாவட்டத்தில் பொது மருத்துவமனையில் 3 பேர், புளியங்குளம் பிரதேச மருத்துவமனையில் ஒருவர் என 4 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் பொது மருத்துவமனையில் 4 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தில் பொது மருத்துமனையில் ஒருவர், புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் ஒருவர் என 2 பேர் மன்னார் பொது மருத்துவமனையில் ஒருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

இவை தவிர, மன்னார் கடற்படை முகாமில் இருவர், வெள்ளாங்குளம் விமானப் படை முகாமில் ஒருவர் என 3 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.

யாழ்ப்பாணம் பி. சி. ஆர் சோதனையில் 99 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்