மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகிட்ட இராணுவ மேஜர் ஜெனரல் மற்றும் அரச அதிபர் ஆகியோரை சந்தித்தது பிரஜைகள் குழு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகிட்ட இராணுவ மேஜர் ஜெனரல் மற்றும் அரச அதிபர் ஆகியோரை சந்தித்தது பிரஜைகள் குழு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கொரோனா அச்சுறுத்தல் நிறைந்துள்ள இந்த காலக்கட்டத்தில் பிரயாணிகள் மட்டில் பாதுகாப்பு படையினர் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளால் பல அசௌரியங்கள் ஏற்படுவதாக மக்களால் தெரிவிக்கப்படும் குறைபாடுகள் மன்னார் பிரஜைகள் குழு மன்னார் தள்ளாடி மேஜர் ஜெனரல் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மன்னார் தள்ளாடி 54வது படைப் பிரிவு கட்டளை தளபதியாக புதியதாக வந்திருக்கும் மேஐர் ஜெனரல் தர்சன விஜயசேகர இடம்மாற்றம் பெற்று வந்ததைத் தொடர்ந்து ஏழு பேர் கொண்ட மன்னார் பிரiஐகள் குழு ஆளுனர் சபையினர் தலைவர் அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் இவரை சனிக்கிழமை (07.08.2021) மரியாதையின் நிமித்தம் தள்ளாடி இராணுவ விடுதி மண்டபத்தில் சந்தித்தனர்.

இச் சந்திப்பின்போது மன்னார் தீவு நுழைவாயில் பகுதியிலுள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் பிரயாணிகள் மற்றும் கடமைகளுக்குச் செல்லும் அரச ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் சம்பந்தமாகவும், இவர்களால் தெரிவிக்கப்பட்ட ஓரிரு பிரச்சனைகள் சம்பந்தமாகவும் இவ் இராணுவ அதிகாரியிடம் இக் குழுவினர் சுட்டிக்காட்டினர்.

யாவற்றையும் அமைதியுடன் உற்றுக்கேட்ட இவ் அதிகாரி சோதனை சாவடிகளில் கொரோனா அச்சுறுத்தலுக்கு பிரயாணிகள் உள்ளாகாத நிலையில் சோதனைகளை மேற்கொள்ளுவதற்கான தக்க நடவடிக்கை எடுப்பதாகவும், பெரும்பாலும் பிரயாணிகள் அரச ஊழியர்கள் சோதனை சாவடிகளில் அசௌரியங்களுக்கு உள்ளாகாத நிலையையும் பிரஜைகள் குழுவினராகிய உங்களால் முன் வைக்கப்பட்டுள் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.

மன்னார் தீவின் நுழைவாயிலில் சில சமயம் கடும் சோதனைக்கு உட்படுத்துவதன் நோக்கம் போதைப் பொருட்கள் கடத்தும் சம்பவம் இடம்பெறுவதால் இதையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது என இவர் பிரஜைகள் குழுவிடம் சுட்டிக்காட்டினார்.

இதைத் தொடர்ந்து பிரஜைகள் குழுவினர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டீமெல்லையும் மாவட்ட செயலகத்தில் சந்தித்து மக்கள் பிரச்சனைகளின் தீர்வுக்காக ஓரிரு விடயங்களை முன்வைத்து கலந்துரையாடியதும் குறிப்பிடத்தக்கது.

மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகிட்ட இராணுவ மேஜர் ஜெனரல் மற்றும் அரச அதிபர் ஆகியோரை சந்தித்தது பிரஜைகள் குழு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ