பாக்கிஸ்தான் கொவிட் 19 தொற்றாளர்களுக்கு தேவையான வைத்திய உபகரணங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம்கையளித்தது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
பாக்கிஸ்தான் கொவிட் 19 தொற்றாளர்களுக்கு தேவையான வைத்திய உபகரணங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம்கையளித்தது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கொவிட்-19 சவாலை வெற்றிக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பாகிஸ்தான் அரசாங்கத்தினால் நோயாளர்களின் சிகிச்சசைக்குத் தேவையான ஒரு தொகுதி உபகரணங்கள் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மொஹமட் சாத் கத்தக் அவர்கள் இன்று (21) கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்து கொவிட்-19 நோயாளர்களின் சிகிச்சைக்கு தேவையான ஒருதொகை வைத்திய உபகரணங்களை வழங்கினார்.

கொவிட்-19 சவாலை வெற்றிக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பாகிஸ்தான் அரசாங்கத்தினால் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 75 செயற்கை சுவாசக் கருவிகள் உள்ளடங்கலாக உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.

பிராந்திய மட்டத்தில் ஒன்றிணைந்து கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிக்கு பங்களிக்கும் விதமாக பாகிஸ்தான் சார்க் கொவிட்-19 அவசர உதவியின் கீழ் இந்த வைத்திய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானின் இந்நன்கொடைக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொண்ட கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இரு நாட்டிற்கும் இடையிலான இருதரப்பு உறவை தொடர்ச்சியாக பேணுவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார் என பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாக்கிஸ்தான் கொவிட் 19 தொற்றாளர்களுக்கு தேவையான வைத்திய உபகரணங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம்கையளித்தது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ