நெல்லியடி பொலிஸ் நிலைய  நிரந்தரப் பொறுப்பதிகாரியாக காஞ்சனா விமலவீர | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
நெல்லியடி பொலிஸ் நிலைய  நிரந்தரப் பொறுப்பதிகாரியாக காஞ்சனா விமலவீர | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

நெல்லியடி பொலிஸ் நிலைய நிரந்தரப் பொறுப்பதிகாரியாக காஞ்சனா விமலவீர இன்று புதன்கிழமை(18.08.2021) சம்பிரதாய பூர்வமாக பதவியேற்கிறார்.

மேற்படி பொலீஸ் நிலையத்தில் பொறுப்பு அதிகாரியாக கடமையாற்றி வந்த கோனாரா என்பவர் உடனடி இடமாற்றம் பெற்று காங்கேசன்துறைக்கு சென்றதையடுத்து தற்காலிக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய ஒருவர் இணைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் மல்லாவி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய காஞ்சனா விமலவீர நிரந்தர பொலீஸ் பொறுப்பதிகாரியாக பொலிஸ் தலைமையகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் சமய அனுஷ்டான விதிமுறைப்படி கடமைகளை பொறுப்பேற்றார்.

நெல்லியடி பொலிஸ் நிலைய  நிரந்தரப் பொறுப்பதிகாரியாக காஞ்சனா விமலவீர | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்