கிழக்கில் சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிக்க 40 மில்லியன் ஒதுக்கீடு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் மூலம் சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் சுமார் 40 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளார் என ஆளுனர் செயலகம் அறிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்திற்கும் சேதனப்பயளை உற்பத்தி ஊக்குவிப்பு நிதியாக தலா பத்து லட்சம் வீதம் வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் 08 உள்ளூராட்சி மன்றங்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி மன்றங்கள், அம்பாறை மாவட்டத்தில் உள்ள 20 உள்ளூராட்சி மன்றங்களுக்கு இந்நிதி பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

கிழக்கில் சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிக்க 40 மில்லியன் ஒதுக்கீடு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எ.எல்.எம்.சலீம்