ஊரடங்கு மீறுவோருக்கு அன்ரிஜென் பரிசோதனை.  கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் கண்டிப்பான உத்தரவு. | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

தனிமைப்படுத்தல் ஊடரங்கு உத்தரவை மீறி யாழ்.நகரில் இன்று நடமாடிய பலர் அன்ரிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

யாழ். மாநரசபை சுகாதாரப் பிரிவினர், பொலிஸார், இராணுவத்தினர் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு நோக்கம் தொற்று நோயைக் கட்டுப்படுத்தி மக்களைப் பாதுகாப்பதே. எனவே, தயவு செய்து அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள் என அன்ரிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்படும் புகைப்படங்களை பதிவிட்டு பிரதமரின் இணைப்புச் செயலாளர் காசிலிங்கம் கீதநாத் தனது ருவிட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, வெள்ளிக்கிழமை இரவு முதல் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவை மீறுவோரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு ஜனாதிபதி கண்டிப்பான உத்தரவிட்டுள்ளார்.

ஊரடங்கு மீறுவோருக்கு அன்ரிஜென் பரிசோதனை.  கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் கண்டிப்பான உத்தரவு. | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்