முஸ்லிம் காங்கிரஸின் பேரணி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
முஸ்லிம் காங்கிரஸின் பேரணி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் விளைவாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவலங்களின் உணர்வலைகளை வெளிப்படுத்தி அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும், உடனடியாக இந்த நெருக்கடிகளுக்குத் தீர்வு வழங்குமாறு அரசை வற்புறுத்தியும் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்த பேரணியும், பொதுக் கூட்டமும் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வெற்றிகரமாக இடம்பெற்றது.

தென்கிழக்கிலங்கையின் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் பெருமளவு இணைஞர்கள், பொது மக்களின் பங்குபற்றுதலுடன் இந்தப் பேரணி இடம்பெற்றது.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன் உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இந்த மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

தென்கிழக்கின், குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்த பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் மீனோடைக்கட்டு பிரதேசத்தில் ஒருங்குசேர்ந்து அங்கிருந்து அட்டாளைச்சேனை பிரதான வீதிவரை இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியின் இறுதியில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் தலைவர் ரவூப் ஹக்கீம் முக்கிய உரையாற்றியதுடன் அரசின் பிற்போக்குத்தனமான நிருவாக செயற்பாடுகளால் நாடு வங்குரோத்து நிலையடைந்து மக்களைப் பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளதாகவும் விசனம் தெரிவித்தார்.

அரசுக்கு எதிரான மற்றும் மக்களின் உணர்வலைகளை வெளிப்படுத்தும் கோஷங்களைப் பேரணியில் கலந்து கொண்டோர் எழுப்பினர்.

முஸ்லிம் காங்கிரஸின் உயர்பூட உறுப்பினர்கள் உட்பட கட்சிக்கிளை முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் பலரும் நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் காங்கிரஸின் பேரணி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House