மாகாண ஆளுநர் - அமெரிக்க தூதுவர் அபிவிருத்தி குறித்து சந்திப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வடக்கு மாகாணத்தின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு எவ்வாறு தொடர்ந்து ஆதரவளிப்பது என்பது குறித்து மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை திங்கட்கிழமை சந்தித்தபோது ஆராய்ந்ததாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.

இலங்கை முழுவதுக்குமான நிலையான முதலீட்டை ஈர்ப்பது மற்றும் பொருளாதார வாய்ப்பை ஊக்குவிப்பது அமெரிக்காவின் முன்னுரிமையாகும் எனவும் அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் வந்த அமெரிக்க தூதுவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடி வருகிறார். அதன் ஒரு அங்கமாகவே வடக்கு மாகாண ஆளுநரை அவர் நேற்று சந்தித்துப் பேசினார்.

மாகாண ஆளுநர் - அமெரிக்க தூதுவர் அபிவிருத்தி குறித்து சந்திப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now




ENJOY YOUR HOLIDAY