பாரிய வீழ்ச்சி அடைந்த விவசாயமும், கடற்றொழிலும் - சபா குகதாஸ் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இலங்கைத் தீவின் உள்ளக பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் தீர்மானிக்கும் விவசாயமும், மீன்பிடியும், மண்ணெண்ணை இல்லாமை காரணமாக பாரிய வீழ்ச்சியை அடைந்துள்ளது. அத்துடன், உற்பத்திகளின் அளவு வீழ்ச்சியடைவதனால், விலை அதிகரிப்பும், மக்களின் வாழ்க்கைத்தர போராட்டமும் முட்டி மோதுகின்ற அவலநிலை உருவாகியுள்ளது.

ஏற்கனவே விவசாயத்திற்கு தேவையான இரசாயன உரத்தினை தடைசெய்தமை காரணமாக, கடந்த ஆண்டு பெரும் போக நெல் வேளாண்மை மிகப் பாரிய வீழ்ச்சியை அடைந்தது. இதனால், அரிசியின் விலை அதிகரித்ததுடன் பாரிய இறக்குமதிக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்களும், எரிபொருள் இல்லாமையால் பல தொழிலாளிகள் தொழில் முடங்கிய நிலையில் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். மண்ணெண்ணையின் அதிகரித்த விலை காரணமாக பலர் போதிய உற்பத்தி இல்லாது வருமானத்தை இழந்து வருகின்றனர்.

நாட்டு மக்களின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்யும் பிரதான தொழில்கள் எரிபொருள் இன்மையால் பாரிய வீழ்ச்சியை சந்திக்கும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாரிய வீழ்ச்சி அடைந்த விவசாயமும், கடற்றொழிலும் - சபா குகதாஸ் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now






ENJOY YOUR HOLIDAY