Mahanadhi மகாநதி 25.08.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. அதனைக் கைகளினால் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • தாய் சாரதா கேட்கும் கேள்விகளுக்கு இனி பதில் சொல்லாமல் இருக்க முடியாது என்று நினைத்தவளாய் தன் மௌனத்தினைக் கலைத்தாள், காவேரி.
  • மௌனத்தின் வெளிப்பாடாக, தான் கர்ப்பமாக இருக்கின்றேன் என்றதுதான்.
  • வீட்டிற்கு அழைக்கப்பட்ட விஜேய். சாரதா என்னதான் சொல்லப் போகின்றா? விஜயின் வீட்டிலிருந்து வந்து கொண்டிருக்கும் எதிர்ப்புகளையும், கசப்பான சம்பவங்களையும் நேரடியாகவே விஜயிடம் சொல்லுவா, சாரதா. சொல்லத்தான் வேண்டும் என்பதும் எனது அபிப்பராயம்.

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.

நன்றி.

மகாநதி - Mahanadhi - 25.08.2025

நான் குறிப்பிட்டது போன்று காவேரி தனது கர்ப்பத்தின் உண்மையினை சொல்லும்போது சாரதாவின் குடும்பமே ஆடிப் போகும். அதுதான் நடந்தது இப்போது. சாரதாவிற்கு கோபமில்லை, ஆனால், ஒரு குற்ற உணர்வு. கங்காவுக்கு எல்லாம் செய்தனான், அப்போது காவேரி கர்ப்பமாக இருந்தும் அவளுக்குச் செய்யாமல் தான் இருக்கையிலே எவ்வளவு கவலைப் பட்டிருப்பாள் காவேரி என்பதுதான்.

கங்காவும் மிகவும் விளங்கத்தக்கமான அக்கா. அவள் இந்த விஷயம் தெரிந்து கோபப்படவில்லை, மாறாக, ஆதங்கப் பட்டாள். என்னென்று இவ்வளவு கவலைகளையும் தனியாளாகத் தாங்கினாய் என்று கேட்டாள் கங்கா, பெயருக்கு ஏற்ற பொறுமையும், நிதானமும், கங்காவுக்கு.

குமரன் புறப்பட்டான், இனி, விஜயுடன் சேர்த்து வைப்பதற்கான ஏற்பாடாக விஜேயைக் கூட்டிக் கொண்டு வருவதற்காக.

சாரதா, இறுக்கமாகக் கதைகின்றா என்பதனால் அவ கூடாதவ அல்ல. இது ஒரு தாய்க்கு தனது பிள்ளை மேலுள்ள கவனம். போய் வாழும் இடத்தில் பாதுகாப்பாகவும், சந்தோஷமாகவும், மன நிறைவோடேயும் சீவிக்க முடியுமா என்பதுதான்.

இவ்வளவு, நடந்த பி்ன்பும், றாதா, கல்யாணி இருவராலும் காவேரிக்குப் பிரச்சனைகள் வருமா? அதற்கு விஜேய் உத்தரவாதம் தர முடியுமா? இப்படியான கேள்விகள் சாரதாவிடம் உள்ளன. இதற்கு விஜய் சொல்லும் பதிலில்தான் காவேரியுடன் விஜேய் வாழ முடியுமா? இல்லையா? என்பதனைச் சாரதா முடிவெடுப்பா.

இது ஒரு தாய் எதிர்பார்ப்பதுதானே! இல்லாவிட்டால், விஜய் காவேரியின் வீட்டில் இருக்க வேண்டிய நிலைமை வரலாம். இது நல்ல ஒரு அபிப்பராயம்தான். ஆனால், இதற்கு பாட்டிகள் விடமாட்டார்கள். ஏனென்றால், அவர்களுக்குத்தான் காவேரியைப் பிடிக்காதே! ஆனால், விஜேயுக்கு வேற option இல்லை.
ஆனால், விஜேயுக்கு ஏன் அத்தை இந்தக் கேள்விகளெல்லாம் கேட்கி்ன்றா என்று சந்தேகம் எழுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏன் சாரதா இவற்றினைக் கேட்கின்றா என்று வீட்டில் யாராவது ஒருவர் சொல்லத்தான் வேண்டும். இப்பவும் சொல்லாவிடில் வாழ்க்கை நரகமாகும். யார்தான் இதனைச் சொல்வார்கள்?

சாரதாவிடம் தான் கர்ப்பமென்று சொல்லிவிட்டேன் என்பதனை காவேரி குறஞ் செய்தியினை விஜேயுக்கு அனுப்பி விட்டாள். இதனைக் கேட்ட விஜய் மிகவும் சந்தோஷப் பட்டான். உடனே வரும்படியும் அந்த குறுஞ் செய்தியில் அந்த அழைப்பு இருந்தது. இனி, உடனே விஜய் காவேரியின் வீட்டிற்கு வர வெளிக்கிடுவான்.

ஆனால், இந்த விஷயம் எப்போது தாத்தாவிற்கு விஜேய் சொல்லுவான். சொல்ல நினைக்கையில் விஜயுக்கு பாட்டியின் நினைவு வரலாம். பாட்டி காவேரியைப் பற்றி சொன்ன வார்த்தைகள் நினைவிற்கு வரும். எனவே, ஒன்றும் சொல்ல மாட்டான் விஜய்.

என்ன நடந்தது என்று விஜேயுக்குத் தெரியாத நிலையில் விஜய் காவேரியிடம் என்ன நடந்தது என்று பூரணமாக அறிவதற்கு எத்தனிப்பான். இல்லை, அத்தை சாரதாவிடமாவது சொல்லும்படி கேட்பான். சாரதா சொல்ல வாய்ப்புகள் உண்டு. ஏனென்றால், காவேரி அங்கு போய் நிம்மதியாகவும், உரிமையுடனும், சந்தோஷமாகவும் வாழ வேண்டுமல்லவா.

றாகினியும், மகன் அஜேயும் வாழவேண்டும் – அதனால், தகப்பனிடம் இருந்து கொஞ்ச சொத்தாவது தாங்கள் அப்பிக் கொள்ளலாம் என்று திட்டம் போட்டுத்தான் றாதா உள்ளே நுளைந்தா. அத்துடன், காவேரியை விலக்குவதற்கு, தன் அம்மா கல்யாணிக்கு உதவி செய்வது போன்று றாதா இவ்வளவும் செய்தா. ஆனால், எல்லாமே புஸ் வாணமாகப் போகப் போகின்றதே!

றாதா சித்தி இதற்கு உடந்தை என்று தெரிந்து விட்டால், முதலில் றாதா காலைக்கப்படுவா, வீட்டினை விட்டு. இதில், காவேரியின் பங்கு என்னவாக இருக்கும்? றாதாவைக் கலைப்பதற்கு காவேரிதான் பிள்ளையார் சுழியினைப் போடுவா.

இதற்குப் பிறகும், கொடுத்த சொத்துக்களை எல்லாம் அழித்து துலைத்து விட்ட அன்புவிற்கு ஒன்றும் இல்லை என்றவுடன் றாகினி அஜேயைத் துரத்தி விடுவாள். காவேரியின் ஆட்சி பலக்கும்.
றாதா செய்த சதியினால், முன்பு அன்பினை வெளியே தாத்தா துரத்தியதினால், சாப்பிட்டிற்குக் கூட ஒன்றும் இல்லாமல் இருக்கையிலே காவேரிதான் சாப்பாடு போட்டா. அதெல்லாம் மறந்து போன றாதாவிற்கு இனி பழம் கஞ்சி கூட காவேரி ஊற்ற மாட்டாள். இனி, அன்பு – றாதா – அஜேயின் வாழ்க்கை றோட்டோரம்தான்.

அடுத்தவர் குடியைக் கெடுப்பவர் வாழ்வு இப்படித்தான் இருக்கும்.

இனி என்னதான் நடக்கும்?

  • காவேரியின் தாய் சாரதா இனி சம்பந்தியாவா. உரிமையுடன் உள்ளே கால் பதிப்பா. காவேரிக்குப் பிள்ளை வயிற்றிலே என்பதால் அங்கும் போய் இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கு. கல்யாணியின் வாய் அடைபடப் போகின்றது.
  • காவேரி இனி கொம்பனிப் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளுவா.
  • பசுபதியின் கொட்டம் அடக்கப்படும். வீடு, காணி திரும்பக் கிடைக்க வாய்ப்புகள் உண்டு.

இனி நடக்கவிருக்கும் ஆட்டங்களைப் பார்க்கத்தானே போகின்றோம்.

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் என்பதனையும், உங்கள் கருத்துக்களையும் Description னில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.

வணக்கம்!