
posted 20th August 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. அதனைக் கைகளினால் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- மௌனம் கொடுமையானது – கொடூரமானது – விளைவு மிகவும் பயங்கரமானது. இதனால், வந்த முடிவு விவாகரத்து.
- இனியும் மௌனமா? காவேரிக்கு ஏற்பட்ட இந்த எதிர்பாராத அதிர்ச்சி அவளுடைய மௌனத்தினை இஸ்த்திரப்படுத்தியது.
- கோவிலிலே காவேரியின் மௌனம் விஜேயைக் கோபப்பட வைத்தது. Bye சொல்லி விட்டுச் சென்ற விஜேய்தான் இந்த விவாகரத்து கடிதத்தினை அனுப்பி இருக்கலாம் என்று காவேரி நினைப்பதற்கு இடம் இருக்கின்றது.
- விஜேய் வீட்டிலிருந்த வந்த இந்த முடிவினை சாரதா எதிர்பார்க்கவில்லை.
- தாத்தாவின் வாயினை அடக்கிய கல்யாணியும், றாதாவும்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
மகாநதி - Mahanadhi - 20.08.2025
அடங்கிப் போயிருந்த கல்யாணி, றாதாவின் தூண்டுதலுக்கு ஆளாகி விஜேயின் வாழ்க்கைக்கு முடிவு கட்டுகிறேன் என்று விஜேயையும், காவேரியையும் நிரந்தரமாகப் பிரித்துவிட எடுக்கும் இடக்கு முடக்கான முடிவுகளானது மிகவும் கொடூரமானது.
ஒன்றுமே சொல்லாமல் இருந்த காவேரி, அதுமட்டுமா மற்றவர்களையும் ஒன்றும் சொல்ல வேண்டாம் என்று தடைபோட்ட காவேரி, என்னுடைய வாழ்க்கையினை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று வாயடிச்ச காவேரி, இப்ப, இப்ப உடனே கையெழுத்துக் கேட்கின்றார்களே போட்டுக் கொடுத்து அனுப்பி விட வேண்டியதுதானே.
நெவீன் கதைக்கப் போகின்றேன் என்று கூறுகையில் வேண்டாம் நான் பார்க்கின்றேன் என்று சொன்ன காவேரியின் இலட்ச்சணத்தினைப் பார்த்தீங்களா?
விஜேய், காவேரியின் இப்போதைய நிலைமை என்ன என்று சாரதாவிற்குச் சொல்ல வெளிக்கிடுகையில் விஜேயை அதட்டி வைத்து ஊமையாக்கினா காவேரி. இப்போது என்ன நடந்தது என்று பார்த்தீங்களா?
எத்தனைதரம் விஜேய் காவேரியிடம் அமைதியாகத்தானே கேட்டான், ஏதாவது பதில் சொன்னாவா காவேரி. விஜேயை லோ லோ என்று அலைய விடுகின்றாள் காவேரி என்று கல்யாணி பாட்டி வீட்டிலே சொல்வது எல்லாம் உண்மையாதாக நிரூபணமாகிவிட்டதே!
காவேரியால் என்னென்று வாய் திறக்க முடியும்? தன் வாழ்க்கையினை விட விஜயினதும், அவனது குடும்பத்தினதும் நிம்மதியும் சந்தோஷமும்தான் முக்கியம் என்று, உண்மையாகவே இஸ்திரப்படுத்தப்பட்ட காவேரியின் அன்பு என்ன செய்யும் – அமைதியாக விலகத்தான் செய்யும்.
ஆனால், தாத்தா இதில் மௌனமாக இருப்பது றொம்பத் தவறு. அவரும் எத்தனையோ தரம் இல்லை இல்லை எப்பவுமே விஜேயுக்கு ஆதரவாகத்தான் இருந்தார். ஆனால், கல்யாணி போட்ட போடில் அவரும் என்னத்தையாவது செய்யுங்கள் என்று கை கழுவிப் போய் விட்டார், சட்டத்தரணியின் முன்னால்.
இதெல்லாம் நடப்பது விஜயுக்குத் தெரியாது. அத்துடன், இதற்கு றாதா தான் ரியூன் பண்ணி விட்டுக் கொண்டிருக்கின்றா. காவேரி செய்ததெல்லாம் ஒரு நொடியினிலே மறந்து விட்டா றாதா. காவேரி போட்ட சாப்பாடு றாதாவின் இரத்தத்திலே ஊறித்தானே இருக்கும். சாப்பாடில்லாமல் அல்லாடும் போது, தாத்தா அன்பரசை வீட்டினை விட்டு கலைத்த பின்பு, காவேரிதான் சாப்பாடு போட்டா. அதையெல்லாம் மறந்து தன் மகன், அஜயினுடைய வாழ்க்கைக்காக காவேரியினுடைய வாழ்க்கையினைக் காவு வாங்குகின்றா றாதா.
இப்படி வாழ்க்கையில் இல்லை என்று எண்ணி விடாதீர்கள் – உதாரணம் சொன்னேனே முன்னைய பதிவினில். எத்தனையோ பிள்ளைகளுடன் இருந்த உறவுக்கு தீனி போட்டவள் அவர்களின் உறவுகளில் ஒன்று. பசி ஆற்றினாள். இப்போ அவள் புறக்கணிக்கப் படுகின்றாள். எப்படி அவள் இதயம் நொறுங்கியிருக்கும். இரத்தம் பீறிட்டிருக்கும். அதேமாதிரித்தானே காவேரிக்கும் றாதாவைப் பார்த்ததும் இருக்கும். காவேரியால் என்னத்தினைக் கதைக்க முடியும்? வாயடைத்துப் போய் நிற்பதனைத் தவிர. ஆனால் ஒன்று, காவேரி யாருக்காகச் செய்தாள் தன் தங்கைக்காகத்தானே. காவேரியின் குடும்பம் அவளைக் உள்ளங் கையினுள் வைத்துத் தாங்குகின்றதே! அது காவேரிக்கு பெரியதும் அசைக்க முடியாத பலம்.
காவேரி கல்யாணிப் பாட்டியின் சொல்லினால் விஜேயை விட்டு விலகத் தீர்மானித்தாள், கல்யாணிப் பாட்டி நீ கல்யாணம் பண்ணி வீட்டிற்கு வந்தால் தான் குடும்பத்துடன் செத்து விடுவோம் என்று வெருட்டிவிட்டுச் சென்றதனால்.
இவ்வாறு கல்யாணி எந்தக் கோவிலிலே வைத்து காவேரியினை வெருட்டி அவளுடைய கனவுகளைச் சிதைத்து, வாழ்க்கையினை சின்னா பின்னமாக்கினாவோ அதே கோவிலில் தெய்வம் இல்லாமல் holidayகா போய் விட்டது. அந்தத் தெய்வம் இனி விழித்தெழுந்து காட்டப் போகும் ஆட்டத்தினை நாங்கள் பார்க்கத்தானே போகின்றோம். கல்யாணியினதும், றாதாவினதும் அஸ்திவாரங்கள் இனித்தான் ஆட்டம் காணப் போகின்றன.
இனி நடக்கப் போவதுதான் என்ன?
- காவேரி கையெழுத்துப் போட்டு விவாகரத்துப் பத்திரத்தினைக் கொடுப்பாள், வீட்டிலுள்ள அனைவரும் தடுத்த போதும்.
- காவேரி கையெழுத்துப் போட்டு விட்டாள் என்று நீ வேண்டாம் என்று கல்யாணிப் பாட்டி சொல்லும் விதத்தில் விஜேயும் கோபத்தில் அவனும் கையெழுத்துப் போட்டு விடுவான். காரணம், காவேரி விஜேயை விட்டு பல காலமாக அவளது தாய் வீட்டில் இருக்கின்றாள் என்பதுதான். அதைத்தானே கல்யாணியும் பழியாகப் போட்டா சாரதா குடும்பத்தின் மேலே.
- விவாகரத்து இருவருக்கும் கிடைக்கும். காவேரி அப்பவும் மௌனமாகத்தான் இருப்பாள் – விஜயுடன் ஒன்றும் கதைக்க மாட்டாள்.
- ஆனால், விஜய் துடிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. அவன் துடிப்பதைப் பார்த்து தாத்தாவும், பாட்டியும் படப்போகும் பாடுகள் இருக்கே – அதைப் பார்க்கவே முடியாமல் இருக்கும்.
இதெல்லாம் நாங்கள் பார்க்கத்தானே போகின்றோம்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் என்பதனையும், உங்கள் கருத்துக்களையும் Description னில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!