
posted 20th August 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. அதனைக் கைகளினால் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- காவேரியும், விஜேயும் ஒருவருக்கொருவர் கதைத்தனை பங்கஜம் மாமி காட்டி சாரதாவைக் குறைகூறினா. ஒன்றுமே சொல்ல முடியாமல் தவிக்கும் சாரதா.
- காவேரி ஒன்றும் சொல்வதாக இல்லை. அப்போ விஜயுக்கு என்னதான் விளங்கும். அதுமட்டுமா காவேரியின் பக்கம் இருந்து ஒருதரும் விஜயுக்கு உண்மையாக என்ன நடந்தது என்பதனை சொன்னால்தேனே விஜயுக்கு ஏதாவது விளங்கும். விளங்காமல் தவிக்கும் விஜய்.
- மௌனம் பலவிதமான கருத்துக்களை வீணாக பழிமுடிக்கும். காவேரியின் மௌனம் எதற்கு? விஷயத்தினைச் சொல்லி சேர்ந்து வாழ வேண்டும் – இல்லையேல் விலத்தி விடவேண்டும். கொடுமையானது மௌனம்.
- ஒருவருடன் ஒருவர் மனம் திறந்து கதைக்க வேண்டும். மற்றவர்கள் மனம் நோகக் கூடாதென்றும், அவர்களின் உண்மையினை மறைத்தோமென்றால், நம் சந்தோஷம் இறந்துவிடும். வாழ்க்கையும் அழிந்துவிடும். கதைத்து அழிந்தால் பரவாயில்லை – ஆனால், கதைக்காமல் அழியுமென்றால்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
மகாநதி - Mahanadhi - 19.08.2025
விஜேயுடன் காவேரியைக் கண்ட சாரதா கோபம் கொண்டாவா? அல்லது கவலையுடன் சென்றாவா? இவவெல்லாம் ஒரு தாயா என்று ஆதங்கம் கொண்டா பங்கஜம். ஆனால், பார்க்கின்ற இரசிகர்களுக்குத் தெரியும்தானே சாரதாவின் வீட்டிற்கு வந்த விஜேயின் சித்தி என்ன பேச்சுப் பேசினா என்று.
பசுபதியினால் சராசரி குடும்பத்தின் நிலைமைக்குத் தள்ளப்பட்ட சாரதா குடும்பம். வசதிகள் விலத்தின – வில்லங்கங்கள் மலிந்தன – குடும்பத் தலைவன் உலகை விட்டு மறைந்தான் – ஊரை விட்டு வேற்றூரில் வாழ்க்கையினை ஆரம்பித்தனர். நான்கு பெண் பிள்ளைகளைக் கொண்டு இந்த உலகத்தில் குடும்பத் தலைவன் இல்லாத நிலையில் எவ்வளவு கஷ்டங்களைத் தாண்டியிருப்பாள் சாரதா.
இது காணாததென்று காவேரியின் மூளையற்ற வாழ்க்கைத் தொடக்கம், விஜேயுடன். இதுதான் காவேரியின் வாழ்க்கையினை சிக்கேறிய நூற்பந்து போன்றதற்கு ஒப்பிட வைத்தது. அதுவும் எதுவுமே ஒருவருக்கும் சொல்லாமல், அனைத்தையும் மூடி மறைத்துக் கொண்டு அப்போதைய நிலையினிலே பிரச்சனைகள் சரியாகி விட்டால் எல்லாம் முடிந்து விட்டது என்று தாங்களே நினைத்துக் கொள்வதில் ஆரம்பித்தது இந்த மௌன வாழ்க்கை.
ஒன்றாக இருந்தவர்களுக்கிடையில், ஒருங்கிணைவு அவர்களையும் அறியாமல் உள் நுழைந்தது. மனமும் இணைந்தது – பின்பு உடலும் இசைந்தது. அறியாமல் அறிந்த உணர்வுகளின் இணைப்பு அறியாமல் உருவாக்கிய புது உயிரின் உதயம். அதையும் தெரியாமல், விஜய் தனக்குள்ளே உருவான விருப்பத்தினை இரகசியமாக அறிவிக்க எடுத்த முயற்சிகள் – பூகம்பத்தினை உருவாக்கி பெரும் பிரளயத்தினை வாழ்க்கையாக்கி விட்டது. இன்னமும் காவேரி்க்கும் – விஜயுக்கும் விளங்காதா என்ன?
இரு குடும்பங்களுக்கிடையிலான மனக் கசப்பு, மான பங்கம், கை கலப்பு, அப்பப்பா எத்தனையோ நடந்தேறி விட்டன.
விஜய் எத்தனை தரம் கேட்கின்றான், சொல்லு காவேரி என்ன காரணம் என்று, எதாவது சொல்கின்றாவா? ஒன்றுமே சொல்லாமல் ஊமையாக நடித்து உன் வாழ்க்கையினைக் கெடுக்கப் போகின்றியா, காவேரி. யாருக்காக? இத்தனை பிரச்சனைகளை எல்லாம் வாழ்ந்து கடந்து வந்தவள் காவேரி, ஏன் இப்போ உன் வாழ்க்கையினை கரடுமுரடாக்கி, விஜயின் வாழ்க்கையினையும் சீரழிக்கின்றாய்?
உனது மௌனத்தினால்தானே இவ்வளவு பிரச்சனைகளையும் உருவாக்கினாய். இனியும் ஏன்?
காதல் உங்கள் இருவருக்கிடையில் உருவாகி விட்டால், நீ அதற்குத் துணி்ந்து முடிவெடுத்து வாழ வேண்டும். எனக்கு வாழத்தான் விருப்பம் – அம்மாவை நான் சமாளித்துக் கொள்வேன் – உங்கள் வீட்டால்தான் பிரச்சனை என்று உடைத்தெறிந்து கதைக்கலாம்தானே காவேரி. ஏன் மௌனமாக இருந்து விஜேயினைக் கஷ்டப்படுத்துகின்றாய்?
வயிற்றினுள்ளே வளரும் பிள்ளையினை எவ்வளவு காலத்திற்கு நீ மூடி மறைக்கப் போகின்றாய்? சொல்லப் போன விஜயையும் சொல்லவிடாமல் தடுக்கின்றாய். எங்கள் வாழ்க்கைக்கெல்லாம் பிரச்சனை என் அம்மா இல்லை உங்கள் வீட்டார்தான் என்று உண்மையினைக் கூறாமல், உன் மேலே பழியினை நீ ஏன் ஏற்றுக் கொள்ளுகின்றாய்?
உண்மையினை உடைத்துக் கதைக்க உன் தைரியம் எங்கே போய்விட்டது? யாருக்காக உன் வாழ்க்கையினைத் தொலைக்கின்றாய்? உனக்குச் சந்தியிலே சிலை வைக்கப் போகின்றார்களா? அல்லது, குடும்பத்தினைக் காத்த வீராங்கனை என்று பெயர் சூட்டி வருசா வருஷம் விழா எடுப்பதாக யாரும் சொன்னார்களா?
விஷயத்தினை எல்லாருக்கும் தெளிவாகச் சொல்லு – விஜேயிடம் விடு முடிவெடுக்க. தாத்தா, பாட்டி வேண்டும் என்றால் விஜய் அவர்களுடன் இருக்கட்டும். நீ தான் வேண்டுமென்றால் உன்னுடன் வரட்டும். உன் வாழ்க்கை முக்கியமா? வாழ்ந்து முடிந்த பாட்டியின் வாழ்க்கை முக்கியமா? இதற்குப் பெயர் சுயநலம் என்று யாரும் சொன்னால் பரவாயில்லை – சொல்லுபவர்கள் வந்தா உனக்கு கஞ்சியா ஊற்றப் போகின்றார்கள்?
அத்துடன், இதற்காகக் காவேரி நீ குடும்பத்தினைப் பிரித்துக் கொண்டு போகின்றாய் என்ற அர்த்தமில்லை. இது உன் வாழ்க்கை. வாழ்க்கையின் ஒவ்வொரு பின்னத்தின் பகுதி போனால் வராது. போனது போனதுதான். அதனை யாராலும் உனக்குத் தரவும் முடியாது காவேரி.
கையில் வைத்திருந்த குளிகைகளை இப்போது மறைத்தாய் உன் தாயிடமும், அக்காவிடமும். ஆனால், பெரிதாகிக் கொண்டிருக்கும் வயிறினை என்னென்று மறைப்பாய்?
அப்படி வெளியே உன் வயிறு தெரிகையிலே உன் குடும்பம் எவ்வளவு கஷ்டப்படும் என்று கொஞ்சமாவது யோசித்தாயா காவேரி?
இதெல்லாம் எங்கள் வாழ்க்கையிலே நடந்திருக்கும். இனி சிலருக்கு நடக்கும். சிந்தியுங்கள். வாழ்க்கை என்பது சந்தோஷமாக வாழ்வதற்கே, அதற்காக மற்றவர்களின் சந்தோஷங்களை அழித்து நாங்கள் வாழவேண்டுமென்றல்ல. அதுமட்டுமல்லாமல் மற்றவர்களுக்குத் துன்பங்கள் செய்யாமல் தூய மனத்துடன் வாழ வேண்டும். அதற்காக எங்கள் வாழ்க்கையினை அழிப்பவர்களுக்காகத் தியாகம் செய்து வாழ வேண்டுமென்றல்ல. வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தினையும் சிந்தித்து, சிதறவிடாமல் கடக்க வேண்டும்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் என்பதனையும், உங்கள் கருத்துக்களையும் Description னில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!