posted 17th November 2025
இந்த சீரியல் றிவூ and analysis ஆனது 14 ஆம் - 17ஆம் திகதிகளின் சீரியல்களின் Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.
- சந்தானத்தின் கட்டார் குடும்பமானது உண்மையென ஏற்கனவே குமரனுக்கு சந்தானம் சொல்லியதை அறிந்து கொண்ட நெவீனும், விஜேயும். விஷயம் தெரிந்தும் அதனை வெளியில் விடாமல் அமசடக்காக இருக்கும் கங்கா.
- சந்தானத்தின் கட்டார் குடும்பமும் நடுத்தர வர்க்கத்தில் உள்ளவர்களாகத்தான் இருக்கின்றனர்.
- பொலிஸ் சொல்லி விட்டுப் போனபடி இந்த இரண்டு குடும்பங்களும் தங்களுக்குள்ளேயே பேசித் தீர்த்துக் கொண்டால் பிரச்சனை குறைவாக இருக்கும். கோடு, கச்சேரி என்றால் அது பிறகு ஒரு தலைப்புச் செய்தியாக வெளிவரும்.
- அமைதியாகக் கதைத்த கட்டார் மனைவி, சாரதாவின் அடிதடிக் கதையினால் அவவால் கொஞ்சம் காரசாரமாகப் பேச வேண்டியதாயிற்று. அவவும் பிள்ளைகளைப் பெத்தவவாச்சே!
- இரு தேசங்களிலும் கல்யாணம் கட்டிவிட்டு அடங்கிப் போன சந்தானம். ஆனால், அடி தடி என்று நிற்கும் இரண்டு குடும்பங்கள் இப்போ.
- சந்தானத்தின் ஒரு சில வினாடிகளின் ஆசை இரு குடும்பங்களுக்கிடையிலான பகை.
- கட்டார் மனைவி கொடைக்கானலுக்கு வந்துள்ளா. ஆனால், சிலர் அமைதியாக அவரவர் ஊர்களிலே இருப்பார்கள். இப்படி எத்தனை பேர் நிஜவாழ்க்கையிலே அவலப்படுகின்றார்களோ?
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
மகாநதி - Mahanadhi - 14 & 17.11.2025
சாரதாவின் குடும்பம் இன்றுதான் சந்தோஷமாக கொடைக்கானல் விஜேயுடனும், நெவீனுடனும் வந்தார்கள் என்றால், அவர்களின் சந்தோஷமானது, பெய்த மழைத் தூறலுக்கு முளைத்து, தூறல் நின்றதும் இல்லாமல் போகும் காளான் போல் ஆகிவிட்டது.
குமரனுக்கு சந்தானம் கட்டாரின் குடும்பத்தினைப் பற்றி ஏற்கனவே சொல்லி ஒருதருக்கும் சொல்ல வேண்டாம் என்ற சத்தியமும் வாங்கி விட்டார். மிகவும் கெட்டித்தனமான செயல். முற்கூட்டிய plan. இதைவிடக் கெட்டித்தனம், குமரன் அதனை மென்டு விழுங்கியதுதான். ஆனால், குமரன் சத்தியத்தினை சாட்டாக வைத்து அமைதியானான். இப்போது விஷயம் தெரிந்தும் கங்கா அமைதியாக இருக்கின்றாள். ஏனென்றால், இந்த விஷயத்தை குடும்பத்தினுள் சொன்னால், தங்களுக்கு வரும் பங்கானது குறைந்து விடும் என்றும், தேவையில்லாமல் தன் குடும்பத்தின் மேலே சாரதா கோப்பபடுவா, இதனால், தங்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுமோ என்பதனால் என்னவோ கங்கா அமைதியாக இருக்கின்றாள்.
காவேரியும், சாரதாவும் கட்டார் குடும்பத்துடன் சண்டை பிடிக்கட்டும், தான் ஒரு பக்கம் சாடை சாடையாகக் குரலைக் காட்டுவோம், அதனால், தப்பித்துக் கொள்ளலாம் என்று கங்கா நினைத்திருக்கலாம். இதனால், ஒரு நாளுக்கு ஒருநாள் வந்த கட்டாருடன் தான் ஒன்றாகலாம் என்ற யோசனையும் இருக்கலாம்தானே!
இரு குடும்பங்களுக்கிடையிலான பிரச்சனைகளுக்குள் நுளைய விரும்பாத, பொலிஸின் கட்டுக்குள் இல்லாத பிரச்சனை ஆனதினால், இரு குடும்பங்களையும் நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள் இல்லையேல் கோட்டிற்குப் போங்கள் என்று பொலிஸ் விலகிக் கொண்டது.
ஆனால், இறுதியாக, காவேரிதான் சாரதாவுடன் இறுதி வரைக்கும் கூட நிற்கும் வாய்ப்புகள் உண்டு. வயிற்றில் பிள்ளை இருந்தாலும் காவேரி சத்தம்தான் போடுவாள். ஆனால், கங்காவோ தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்து விடுவாள். ஜமூனாவோ இடைக்கிடை குரல் கொடுப்பாள் இந்தச் சகோதரங்களுக்கிடையிலான நினைவுகளும், நிலைப்பாடுகளும். அவ்வளவுதான்.
பாசத்திற்குக் குறைவில்லாத குடும்பம் சாரதாவின் குடும்பம். ஆனால், தந்தையின் செயலால் இப்போது நிலை குலைந்து போயுள்ளது. சந்தானதுக்கு உதவி செய்த நல்ல மருமகன், குமரன். அதுதான், குமரனுக்கு அவ்வளவு பெரிய அங்கீகாரம் சந்தானத்திடம். வந்திருக்கும் கொஞ்ச நாட்களிலோ வாழ்க்கையினை நாடகமாக்கி படம் காட்டிவிட்டு சீவிய காலத்திற்கு அல்லோல கல்லோலப்படுங்கள் என்று இரண்டு குடும்பங்களுடனும் தான் சந்தோஷமாவும், நிறைவாகவும் அனுபவித்து விட்டு, இருக்கையிலே நன்றாக உண்டு, உறங்கி விட்டு, கண்மூடிய சந்தானத்தைப் பற்றி சாரதா கூறியதினை பிழை என்ற சொல்லத்தான் முடியுமா? அத்துடன், சாரதா, சந்தானத்தின் படத்தினைத் எறிந்து உடைத்தது பிழையென்று சொல்லத்தான் முடியுமா?
பெண்பிள்ளைகளைப் பெற்று விட்டுப் போன சந்தானம் ஊரின் வாயினை அடக்க முடியுமா? ஆனால், சாரதாவைத் திண்டு தண்ணி குடிப்பதை சமுதாயம் நிறுத்துமா? அல்லது கட்டார் மனைவியை என்னென்ன பெயர்கள் வைத்து நாறடிக்குமோ இந்த சமுதாயம். நல்ல காரியங்களுக்கு சேர்க்கப்படாத உறவாகிவிடும் சாராதாவின் குடும்பம். சொந்தங்கள் திண்டு தண்ணி குடித்து கொப்பிளித்து விட்டுத்தான் காலை தேநீரே குடிப்பார்கள். இவர்களில் முளிப்பதே அசிங்கம் என்று நேருக்கு நேராகச் சொல்வார்கள். வரும் சம்பந்தங்களை இடைமறித்து பிரிப்பார்கள்.
விஜேயின் பாட்டி, தாத்தா, சித்தி, அன்பரசு காவேரியின் குடும்பத்தினை தரக் குறைவாகச் சொல்லுவார்கள். சபையிலிருந்து ஒதுக்குவார்கள்.
வாழ்க்கையினை அனுபவித்துவி்ட்டு சந்தானம் கண்மூடிவிட்டாலும், வாழ்க்கைப் பட்டதுகளும், வாழப் பெத்ததுகளும் படும் அவமானங்களை பட்டியலில் அடக்கவே முடியாது.
ஒரேயொரு நெஞ்சு வலியினால் சந்தானம் இறைபதம் சேர்ந்தாலும், இங்குள்ள சாரதாவின் குடும்பமும், கட்டார் மனைவியின் குடும்பமும் தினம் தினம் சாக வேண்டியதுதான். இந்த இடறுபாடுகளினால் ஏற்படும் வாதைகளை விட்டு கணமும் மீண்டெழுவதிலேயே மிகுதி காலங்களும் கரைந்து விடும்.
இப்படியாக வாழ்க்கையினை சிக்க வைத்து விட்டுப் போனவர்களும் அவர்களின் குடும்பங்களும் அண்டாடம் படும் வேதனைகளை யார்தான் உணருவார்கள்?
உங்கள் கருத்துக்கள் என்னென்ன என்று கூறுங்கள்.
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!