
posted 1st September 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. அதனைக் கைகளினால் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- பணக்கார விஜேயாக இல்லை, சாதாரண விஜேய், இப்போ. ஏற்றுக் கொள்ளுவாவா என்று கேட்டுச் சொல்லு என்று காவேரியிடமானதும், சாரதாவினதுமான கேள்வி.
- கொள்ளுப் பேரன் என்றதும், தாத்தா குடும்பம் துடித்தது. அந்தத் துடிப்பு விஜேய்-காவேரி குடும்பத்தில் இல்லை.
- ஒரு குடும்பத்தினைப் பிரித்த பாவம் என்னென்று, யாரையெல்லாம் பழிவாங்கும்?
- சொத்து, சொத்து, சொத்து – படிப்பித்து, வளர்த்த எல்லாவற்றிற்கும் கூலியாக எல்லாவற்றினையும் உங்களுக்குத் தாறன் என்று கடைசியாக, ஜீப் சாவியினையும் தாத்தாவிடம் கொடுத்து விட்டுச் சென்றான் விஜய்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
மகாநதி - Mahanadhi - 01.09.2025
சந்தோஷத்தில் மிதந்த அன்பு. இதைத்தான் எதிர்பார்த்த அன்பு. இனி அன்பின் ஆட்டத்தினை தாங்க முடியாமல் துடிக்கப் போகும் தாத்தா, பாட்டி.
செய்ததற்கு அனுபவிக்கத்தானே வேண்டும். அனுபவித்தே ஆக வேண்டும். இது கடவுளின் திட்டம்.
சொன்னது, தீர்ப்பிடப்பட்டது, மீண்டும் உங்களை நோக்கி வந்தே தீரும். காவேரி, காவேரி என்று போனாயானால், கடைசியாகச் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் போகும் என்பது, இனி யாருக்கு நடக்கும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?
தீர்ப்பிட்ட தீர்ப்பு திரும்பி வராது என்றுதானே அனைவரின் நினைப்பு. அப்படியில்லை என்று இந்த சீரியல் காட்டப் போகின்றது பாருங்கள். அனைவரும் எதிர்பாருங்கள்.
இதனை எதிர் பார்க்காத, காவேரியும், சாரதாவும் என்ன செய்வார்கள் என்று நினைக்கின்றீர்கள்? இப்போது காவேரி பிள்ளையினைத் தாங்கி இருக்கின்றாள் என்று காவேரியோ அல்லது சாரதாவோ அல்லது சாரதாவின் வீட்டிலுள்ளவர்கள் தாத்தா, பாட்டியிடம் சொல்லியிருந்தால், பாட்டி, சித்தி என்ன சொல்லுவார்கள்? விஜேயின் சொத்தினை ஆட்டையைப் போடுவதற்காக அடுத்த பிளான் என்று சொல்ல மாட்டார்களா? நிட்சயம் சொல்லுவார்கள். அதனைத் தாங்கும் சக்தி சாரதா குடும்பத்திற்கு இல்லை. ஆகவேதான் விஜேய் சொத்து வேண்டாம், நான் பணக்காரன் என்றும், அதுதான் காவேரி இப்படி சேர்ந்து வாழுவதற்கு அடம் பிடிக்கின்றா என்று சாரதாவிடம் சொன்ன பிறகும், சாரதா விஜேயினை ஏற்றுக் கொள்ளுவாவா?
ஆனால், இப்ப, விஜய் ஒன்றும் இல்லாமல் காவேரியிடம் போகின்றான். காவேரியை விடுங்க, சாரதா விஜேயை ஏற்றுக் கொள்ளுவாவா? நிட்சயமாக, விஜேயை தானே ஆராத்தி எடுத்து வாங்க மாப்பிள்ளை என்று வீட்டிற்குள் அவவே கூட்டிக் கொண்டு உள்ளே போவா. இதுதான் நடக்கும். இதுதான் சாரதா.
விஜேய் என்னதான் செய்வான்? எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். காவேரியின் குடும்பம் அப்படி இல்லை என்று விளக்காமாகச் சொல்லிப் பார்த்தான். ஆனால், ஒன்றுமே புரியமாட்டோம் என்று அடம்பிடித்தனர், பாட்டி, சித்தி குடும்பம். அத்துடன், தாத்தா இங்கு ஒன்றுமே சொல்லாதது அவரும் பாட்டி சொன்னதை ஏற்றுக் கொள்ளுகிற மாதிரித்தானே இருக்கின்றது.
தாயில்லாவிட்டால் அனைத்தும் சீரற்றுப் போகும் என்பது இங்கு புலனாகின்றது. தாத்தாவிற்கு, விஜய் ஒரு மகளின் மகன். அடுத்தது, அஜேய் யாரு? அடுத்த மகளின் மகன். தாத்தா – பாட்டி இவர்களைப் பொறுத்தவரை அவர்களின் ஒரு பிள்ளை, விஜேயின் தாய் இப்போது இல்லை, அப்போ விஜயின் பக்கம் ஒரு weak point இருக்கின்றதுதானே. அதுதான், விஜேயின் தாய் இல்லாதது. ஆனால், இங்கு, அஜேயுக்கு, தாய் (அதுதான் மகள்) இருக்கின்றா, அவவுக்கு அவவின் புருஷன் உயிரோட இருக்கின்றான். அப்போ விஜேய் போனால்தான் என்ன? இருந்தால்தான் என்ன? அதுதான் எல்லா சொத்துக்களையும் வி்ட்டு விட்டுப் போய் விட்டான்தானே! என்ன ஒரு கவலை இருக்கும் – விஜேய் சொத்தினை தாத்தா – பாட்டிக்கு எழுதிக் கொடுக்கும் மட்டும் அவர்கள் கவலை மாதிரி நடிப்பார்கள் என்றுதான் எனக்குப் படுகின்றது.
ஆனால், இதனை, அதாவது, சொத்தினை எல்லாவற்றினையும் தாத்தாவுக்கும் – பாட்டிக்கும் மாற்றி எழுதி பத்திரம் அனுப்புவான் விஜய். இது உடனே நடக்கும். இனி தாத்தா – பாட்டி சொத்துக்கு இனி guarantee இல்லை. ஏனென்றால், அந்தச் சொத்திற்கு வேதாளம்தானே பொறுப்பு. தாத்தாவிற்கு அன்பினைப் பிடிக்கவில்லை என்றாலும், கல்யாணிப் பாட்டிக்கு அன்பின் குடும்பத்தினைப் பிடிக்கும்தானே!
இதுமட்டுமா, றாகினி உள்ளே வர, பசுபதி சம்பந்தி என்று அன்பைக் கூப்பிட்டுக் கொண்டு உள்ளே வருவான். ஒன்றுமே செய்யவும் முடியாமல், சொல்லவும் முடியாமல் தாத்தா, பாட்டி இருக்கும் சூழ்நிலையினை அன்பு உருவாக்குவான்.
சொத்துக் கிடைப்பதனால், றாகினி, அஜேயுடன் ஒன்று சேருவாள். ஆனால், சொத்தினை வாங்கி வரும்படி அஜேயிடம் அடம்பிடப்பாள். இதனால், ஒரு பிரச்சனையும் விஜேய் பக்கமோ அல்லது காவேரியின் பக்கமோ இருந்து வராது. ஆனால், விஜேயுக்கும், அஜேயுக்கும் இடையில் கதையில்லை. இது விஜேயுக்கும், தாத்தா, பாட்டிக்கும் இடையில்தான் இந்த விவகாரம் இருக்கும். இதனால், அன்பு தாத்தாவை கஷ்டப்படுத்துவான். அதுமட்டுமல்லாமல், பசுபதி இந்த விவகாரத்தில் உள்ளிடுவான். அத்துடன் அடியாட்களால் தாத்தா – பாட்டிக்கு இடையூறுக்கள் வரலாம். இவர்கள் வயசானவர்கள், என்னதான் செய்ய முடியும்?
விஜேயுக்கும், காவேரிக்கும், காவேரியின் குடும்பத்திற்கும் செய்த துரோகங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, அன்பு – பசுபதி – றாகினி ரூபத்தில் இராட்சத தோற்றம் பெற்று வரும். என்ன செய்வார்கள் தாத்தாவும், பாட்டியும்? காவேரியின் வீட்டிற்குப் போவார்களா? போய்த்தானே ஆக வேண்டும், எப்படியாவது யாருடைய காலில் விழுந்தவது சொத்தினைக் காப்பாற்ற வேண்டுமல்லவா?
இப்பதான், சாரதாவின் ஆட்டத்தினைக் காணப்போகின்றோம். சாரதா விஜயைப் போக விடமாட்டா. காவேரி போகும் படி சொல்லுவா, விஜயை.
இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் என்று கொமென்ற்றில் சொல்லுங்கள்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் கருத்துக்களை Description னில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!