posted 7th December 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.
- கிறிஷ்னாவிற்கு விஜேய் கொடுத்த காலக் கேடு முடிவடைந்த நிலையில், பாகம் பிரிப்பதில் பிடிவாதத்துடன் இருக்கும் கிறிஷ்னா, இறங்கிப் போயுள்ள சிந்துவும், அம்மாவும்.
- விஜேய் என்னென்ன யோசிக்கின்றான் என்று ஒருதருக்கும் விளங்கவில்லை. அனைவரும் உறைந்து போய் உள்ளார்கள்.
- விஜேயின் பாட்டியாலும், கல்யாணி சித்தியாலும் ஏதாவது பிரச்சினைகளை வீசி விடலாம் என்று அடிக்கடி கூடி ஆராய்கின்ற கூட்டத்தில் இவர்கள்.
- காவேரியும் விஜேயின் புத்திமதியினால் தன்னைச் சுதாகரித்துக் கொண்டாள்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
மகாநதி - Mahanadhi - 28, 29 Nov - 01.12.2025
விஜேய் கிறிஷ்ணாவிற்கு ஒரு நாள் காலக் கேட்டினைக் கொடுத்தான், சிந்திக்கும்படி. காலக் கெடுவோ முடிந்து விட்டது. கங்காவும், சாரதாவும் விஜேயின் வீட்டில் தங்குவதில் மிகவும் சிரமத்தினை தாத்தாவிற்கும், பாட்டிக்கும் கொடுப்பதாகக் கவலை கொள்ளுகின்றனர். ஆனால், அதனையும் சமாளி்க்கின்றாள் காவேரி. ஆனால், இவர்களின் ஊரோ கட்டார் இல்லை, பக்கத்திலே தேனி என்ற இடமாம். இதனை சாரதாவின் ஊர் பாஷை பேசுவதிலிருந்து சாரதா கண்டு பிடித்து விட்டா.
அப்படியென்றால், இத்தனை வருஷ காலமாக ஒன்றுமே லீக் பண்ணாமல் கதையெல்லாம் அமசடக்காகப் போனதென்றால் இது எங்கேயோ இடிக்கின்றதே. அப்போ இவர்கள் இங்கே localலிலேதான் இருக்கிறவர்கள். இங்கேதான் சந்தானம் குடும்பம் நடத்தியிருக்கின்றாரோ.
கிருஷ்ணாவும் சொல்கின்றானே, நானா கடன் வாங்கி இப்படி ஒழித்துக் கொண்டு திரிகின்றேன் என்று. உன்ர புருஷன்தானே வாங்கினார். அதுதான் சந்தானம்தான். ஆகையாலேதான் இவர்களுக்கு இங்குள்ள சட்டங்களானது தெரிகின்றது. இங்கு இவர்கள் local என்பதனால்தான், இவர்கள் போட்ட உடுப்புடன் வந்துள்ளார்கள். தாங்கள் எங்குதான் போவது உங்களைத் தவிர என்று சொன்னதெல்லாம் பொய்தானே!
சாரதாவின் வாடகை வீட்டினை விட்டு விஜேய் தனது வீட்டிற்குக் கூட்டி வந்த போது, விஜேயுக்கு முன்னமே கிறிஷ்ணாவின் குடும்பம் வந்திருக்கின்றார்கள் என்றால் இதற்குப் பின்னால் யாரோ இருக்கின்றார்கள் என்றதானே சொன்னேன். ஆனால், அப்படி அல்ல. இவர்களுக்கு உள்ள localகளெல்லாம் அத்துப்படி என்றதான் நினைக்கத் தோன்றுகின்றது.
அதுமட்டுமல்லாமல், அதாவது, சாரதாவின் குடும்பத்தின் எல்லாரையும் சந்தானம் காட்டி இருக்கின்றார் என்றால், இந்தக் குடும்பம் சாரதாவின் குடும்பத்தினை போட்டோக்களில் பார்க்கவில்லை. மாறாக எல்லாரையும் நேராகவே இவர்கள் பார்த்துள்ளார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகின்றது.
அத்துடன், இவர்கள் கட்டாரில் இருந்து வந்தோம் என்று அன்று முதல் நாளில் சொன்னது பொய்யாகத்தான் தெரிகின்றது. அல்லது கட்டாரில் இருந்து ஏற்கனவே வந்தவர்கள் தங்கள் ஊரிலிருந்து அன்று காலை சாரதாவின் கொடைக்கானல் வீட்டிற்கு வந்ததினை ஏன் அவர்கள் சொல்லவில்லை. தங்களுக்குத் தங்குவதற்கு ஒரு இடமும் இல்லை என்பதும், அத்துடன், விஜேயின் வீட்டிற்கு வரும் போதும், சாரதாவின் வீட்டிற்கு வரும்போதும் எங்கிருந்து அவர்களின் suitcase வந்தது?
கிருஷ்ணாவும், சிந்துவும் இங்கு localஆகப் படித்தார்களா அல்லது கட்டாரில் படித்தார்களா என்ற கேள்வியும் கேள்வியாகவே உள்ளது.
இவர்களைப் பற்றி விஜேய் அறிந்து கொண்டிருப்பதாகத்தான் தோன்றுகின்றது. ஏனென்றால், கிறிஷ்ணாவின் கல்வியினைப் பற்றியும், அவன் வேலை செய்ததினைப் பற்றியும் கிறிஷ்ணாவிடம் இருந்து அறிந்து கொண்டான். இனி, கிறிஷ்ணா வேலை செய்த அந்தக் கொம்பனியில் இவனைப் பற்றிக் கேட்டால் விபரங்கள் தெரியவரும். அதிலிருந்து தலையினைப் பிடிக்கலாம்.
விஜேய், கிறிஷ்னாவிற்கு கொடுத்துள்ள optionஐ சிந்துவும், சந்தானத்தி்ன் இரண்டாவது மனைவியும் ஏற்றுக் கொள்ளுகையில், கிறிஷ்னா ஏற்றுக் கொள்ளாமல் அடம் பிடிக்கின்றான். இதில் இவர்களின் behaviour றிலிருந்து இவர்களின் கதையானது உண்மையாக இருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகின்றது.
சாரதாவை அக்கா என்று கிறிஷ்ணாவின் அம்மா கூப்பிடுவதனையிட்டு எரிந்து விளுகின்றா சாரதா. ஆரம்பத்திலிருந்து சிந்துவின் மௌனமானது உண்மையென நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. இந்த உண்மை குமரனுக்குத் ஏற்கனவே தெரியும் என்றும், அது இப்போ கங்காவுக்கும் தெரியும் என்றால், சாரதாவின் பதில் என்னவாக இருக்கும் என்றுதான் யோசிக்கவே முடியவில்லை.
இங்கு கிறிஷ்ணாவின் குடும்பத்தினை விஜேய் தனது வீட்டில் கொஞ்சக் காலம் சேர்த்து இருப்பதற்குக் காரணம், மனிதாபமா? அல்லது இரு குடும்பங்களையும் ஒன்று சேர்ப்பதா?
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!