
posted 24th August 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. அதனைக் கைகளினால் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- என்னம்மா வேணும் உனக்கு ஏன் நான் விஜேயுடைய சொல் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டேன் என்று அடம்பிடிக்கின்றேன் என்று. சொல்லுறன் நான் என்றாள் காவேரி. கலைக்கப்பட்ட மௌனம்.
- காவேரியின் மௌனம் மிகவும் நீடித்ததுமல்லாமல் எல்லோரையும் குளப்பியது. இல்லை – மௌனத்தால் குளப்பினாள் காவேரி.
- விஜேய்தானே விவாகரத்து கேட்கின்றார் – அப்போ விஜயைக் கையொப்பம் முதல் போட்டு வாங்கிக் கொண்டு வாங்க – அதற்குப் பிறகு நான் கையெழுத்துப் போடுகிறேன் என்று ஆப்பு வைத்தாள் காவேரி.
- விளிகள் பிதிங்கியபடி வெளியேறிய பாட்டிகள். கோட்டில சந்திப்போம் என்று மிச்ச விளக்கம் தெரியாத கல்யாணியும், றாதாவும்.
- காவேரியின் மிஸ் கோள்களினைப் பார்த்த விஜய் திரும்ப கோள் பண்ணுகையில் காளி ஆட்டம் ஆடிய சாரதா.
- காவேரியின் கர்ப்பம் என்னத்தினை தெரியப்படுத்துகின்றது?
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
மகாநதி | Mahanadhi | 22.08.2025
ஏன்டீ நீ என் வயித்திலையா பிறந்தாய் என்று சாரதா பேசியது கோபத்தில் அல்ல, தன் பிள்ளையினை மற்றவர்கள் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு தொந்தரவுபடுத்துகின்றார்களே என்ற மனம் தாங்காமல்தான். இதெல்லாம், காவேரிக்கு விளங்கும். அம்மாதானே பேசுது என்று மனதினிலே ஒன்றும் நினைக்காத பிறப்புதான் காவேரி.
சொல்லடி, எடுத்தவுடனே ஆணுக்கு ஆணாகவும், பெண்ணுக்குப் பெண்ணாகவும் ஒரு சிறு பிரச்சினை என்றாலே ஆளுக்கு முன்னால் நின்று ஒரு முடிவு கட்டுவாய், இப்ப ஏன்ரீ வாயைப் பொத்திக் கொண்டு நிற்கின்றாய்? அவன்தான் வேண்டுமென்றால் அவனுடன் போக வேண்டியதுதானே. நான் என்ன வேண்டாம் என்றா சொல்கின்றேன் என்பது சாரதாவின் நிலைப்பாடு.
மௌனத்தினால் காவேரி எல்லோரையும் ஒரு கை பார்த்துக் கொண்டிருக்கின்றாள். என்ன நினைக்கின்றாள், என்ன சொல்லப் போகின்றாள் என்று கூட ஊகிக்க முடியாமல் இரண்டு பாட்டிமாரும் அல்லலாட வைத்தாள் காவேரி.
நீ வளர்தனிதான், ஆனால், நான் விஜயோட வாழ்ந்தனான். எனக்குத் தெரியாதா விஜயைப்பற்றி. என்ன நினைப்பார்? என்னத்தைச் சொல்லுவார்? என்று தெரியாமலா அவருடன் வாழ்ந்தனான். இப்படியான விஜய் எனக்கு, நான் இந்த நிலைமையிலே இருக்கையிலே, விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்புகிறார் என்றால், என்னைப் பார்க்க உங்களுக்கு கேணக்கிமாதிரியாகவா தெரிகின்றது?
விஜய் கோபப்படுவார். சத்தம் போடுவார். பிறகு வருவார். என்னுடன் கதைப்பார். ஆனால், இன்றைக்கு அவரை எதிர்பார்த்த காவேரிக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. ஏனென்றால், காவேரி இப்படி ஏன் react பண்ணுகின்றாள் என்று விஜயுக்குப் புரியவில்லைதான். தான் தனிமையில் இருந்தால்தான் என்ன காரணம் என்று விஜயுக்குத் தெரியவரச் சாத்தியக் கூறுகள் அமையும்.
இப்போது பார்த்தால், காவேரி, தனது பக்கத்து நியாயத்தினை குமரனுக்கும், நெவீனுக்கும் சொன்னாள். இதனால், காவேரியின் நிலைமை என்ன? இப்போதைய நிலைமை என்ன? என்று குமரன் அல்லது நெவீன் விஜேயுக்குச் சொல்லக் கூடிய சந்தர்ப்பம் அமைகின்றதுதானே! விஜேய் எப்போது போவான் என்று, விஜேயின் சூடு ஆறவில்லை, உடனே, றாதா அட்வகேற்றினை வீட்டிற்கு வரச் சொல்லி, வரும்போது அதற்குரிய பத்திரத்தினையும் கொண்டுவரும்படி சொல்லி, இங்கு கல்யாணியும் சேர்ந்து தங்களது கள்ளத்திட்டத்தினை காவேரிக்கும், விஜயுக்கும் எதிராக விவாகரத்தினை எடுப்பதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டு வெளிக்கிடுகின்றார்கள்.
ஆனால், காவேரி, விஜேயின் மேலே வைத்த நம்பிக்கை, ஒரு சொட்டும் குறையாமல், எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் இது எங்கள் வாழ்க்கை, நீங்கள் யாரு எனக்கு என்ற மாதிரி, இவர்களையெல்லாம், துச்சமெனத் தூக்கி எறிந்தாள் காவேரி.
காவேரியின் போனுக்கு பதில் கிடைக்காமல் விஜய், என்ன நடக்கின்றது என்று யோசித்தானே தவிர, விஜய் தடுமாறவில்லை. தன் நிலை குலையவில்லை. நிதானமாகச் சிந்தித்தான்.
இப்படியான் வாழ்க்கை நிலைமைகளில்தான் நிதானம் அவசியம் என்பதனைப் படிப்பிக்கின்றது.
ஒருவருக்கொருவர், அன்புடன் இருந்தால் ஒருநாளும் ஆணின் வீட்டில் பிடிக்கவே பிடிக்காது. அதுவும், பெண்ணானவள் வசதிகள் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தால், சொல்லத் தேவையில்லை. இவ்வாறான வாழ்க்கையினை காவேரி என்னென்று வாழப் போகின்றாள் என்பது ஒரு சாம்பிள். ஆனால், அதனையும் ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம், இல்லாவிட்டால், நாங்களும் வேறொன்றினை தயாரித்துக் கொள்ளலாம். அப்போதுதான் வாழமுடியும், வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்.
பொறுமையினை இழந்தாள் சாரதா. கோபத்தினை மூட்டியது காவேரியின் மௌனம் இல்லை. அது, கல்யாணியினதும், றாதாவினதும் கீழ்த்தரமான பேச்சுக்கள். அந்தப் பேச்சுக்களால் எவ்வளவு சாரதாவையும் அவளது குடும்பத்தினையும், அவர்களது இதயத்தினையும் இரத்தம் பீறிடச் செய்திருக்காது?
ஒரு சொல்லினைச் சொல்லும்போது அது மற்றவர்களை எவ்வளவு பாதிக்கும்? அல்லது எவ்வளவு வாழ வைக்கும் என்று கொஞ்சமும் யோசிக்காமல் கதைக்கக் கூடாது.
இப்போது உள்ள நிலைமையானது, வார்த்தைகளினால் ஏற்பட்ட பாதிப்புகள்தான். சாரதா காவேரியின் மேலே ஏறி விழுந்தா. இத்தனை நடந்த பின்பும் உனக்கு அவன் தேவையா? விஜய், காவேரிக்குத் தேவையா? தேவை இல்லையா? என்று நெவீனுக்குத் தெரியும். ஆனால், நெவீனோ சொல்லவில்லை.
இப்போது, காவேரிதான் சொல்ல வேண்டும். அதுவும் தனது நிலைமையினைக் காவேரி தன் தாயிடம் தான்தான் சொல்ல வேண்டும் என்று நினைத்தாளோ தெரியவில்லை. நான் சொல்கிறேன் என்று சொன்னாள், காவேரி.
நான் விஜேயுடன் மனைவியாக நடிக்கத்தான் போனேன். ஆனால், அதுமட்டுத் தான் உங்களுக்குத் தெரியும். இவ்வளவுக்கு வெண்ணிலா விஜய் மேலே காதல் கொண்டவள் ஏன் விஜயினை விட்டுப் போனாள் என்று ஒருதரும் யோசிக்கவில்லையே! அதற்குக் காரணமும், நான் விஜயின் பதிலை எதிர்பார்ப்பதற்கும் ஒரு விடைதான் என்றாள் காவேரி.
நானும் விஜயும் நடித்தது ஏதோ உண்மைதான். அதையும் தாண்டி நானும், விஜேயும் புருஷன், மனைவியாக வாழ்ந்தது ஒருதருக்கும் தெரியாதல்லவா? அதுதான் உண்மையென்றும், இப்போது நான் கர்ப்பம்தரித்து இருக்கின்றேன் என்று உண்மையினை உடைத்தெறிந்தாள் காவேரி.
இனி என்னதான் நடக்கும்?
- காவேரியின் முடிவினில் இறுக்கமாக இருப்பாள் – இது அவள் வாழ்க்கை. விடுவாளா? விடமாட்டாள், களம் இறங்கி ஆடுவாள். காவேரிக்குத் துணையாக இனி சாரதாவின் ஆட்டம் இருக்கே அதை இனிப் பார்க்கத் தேவையில்லை. உண்மை தெரிந்து விட்டதல்லவா – ஒருதரும் கதைக்கத் தேவையில்லை – சாராதாவி்ன் ஆட்டத்தினைப் பார்ப்போம்.
- விஜயுக்கு உண்மை நிலைமையினைச் சொல்லும் படி சாரதாவே காவேரியின் போனைக் கொடுப்பாள், மாப்பிள்ளையோட கதையடி – மிச்சத்தினை நான் பார்க்கிறேன் என்பா சாரதா.
- கோட்டுக் கடிதம் அனுப்புவதற்கு றாதாவும், கல்யாணியும் ஆயிரம் தரம் அல்ல கோடிக் கணக்கில் யோசிப்பார்கள்.
இனி நடக்கவிருக்கும் ஆட்டங்களைப் பார்க்கத்தானே போகின்றோம்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் என்பதனையும், உங்கள் கருத்துக்களையும் Description னில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!