posted 14th November 2025
12 - 13. 11.2025
இந்த சீரியல் றிவூ and analysis ஆனது 12 ஆம் - 13ஆம் திகதி வரையான சீரியல்களின் Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்த Review & Analysisனில்;
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.
- வீட்டினை விற்கப் போவதாக இரண்டு, மூன்று நாட்களுக்குள்தான் காவேரியின் வீட்டில் பேச்சு வார்த்தை இடம்பெற்றன. இதெப்படி, கட்டார் வரை தெரிந்தது?
- விஜேயின் வீட்டிலுள்ள அன்பரசு விஷயத்தினை பசுபதிக்குச் சொல்லி இருக்கலாம். பசுபதி, இவர்களுக்குக் கட்டாருக்குச் சொல்லி இருக்கலாம். ஆனால், இன்றுதான் எழுதுவதற்காக சாரதா குடும்பம் கொடைக்கானலுக்குப் புறப்படுவது இவர்களுக்கு என்னென்று தெரியும்?
- எல்லா பத்திரங்களுடனும் இவர்கள் வந்தார்கள் என்றால், இவர்கள் என்ன நேராகவே வந்தார்களா? இல்லையே வேறொருவரின் வீட்டில் நின்றுதானே வந்தார்கள். அப்போது ஒரு support இங்கு இவர்களுக்கு இருக்க வேண்டும்.
- பொலிஸ் வந்தார்கள். கோட்டிற்குப் போகும்படி சொன்னார்கள். வந்த group மிகவும் பம்மியது. இதிலே றொம்ப சந்தேகம் எழுகின்றது.
- இப்படிப் பார்க்கும் போது கட்டாரில் இருந்து வந்த குடும்பமானது பொய்யென்று தோன்றுகின்றது.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
மகாநதி - Mahanadhi - 12 - 13.11.2025
சாரதாவின் குடும்பமானது கொடைக்கானல் இன்று போவதாக குறிப்பாக இந்த நாளினை கட்டாருக்குச் சொல்லி அங்கிருந்து இவர்கள் வந்தார்கள் என்றால், இது ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட திட்டமாகும். அதாவது, சாரதாவின் குடும்பத்தினை மரியாதையீனப் படுத்துவதுதான் அந்தக் கூட்டத்தின் குறிக்கோளே! அதுதான், பசுபதியின் குடும்பமாகத்தான் இருக்கும் என்பது சந்தேகத்திற்கே இடமில்லை. இதற்குள் அன்பரசின் கூட்டும் இருக்கலாம் என்பதில் சந்தேகமே இல்லை.
சந்தானத்தின் பூரணமான சரித்திரமே தெரிந்தது என்றால் அது பசுபதிக்கு மட்டும்தான். அத்துடன் எல்லாப் பத்திரங்களும், பசுபதி கொண்டுவந்த பொய் ஆவணங்களின் pattern ஆகத்தான் இவர்களும் கொண்டு வந்திருக்கின்றார்கள். இவர்கள் இங்கு local லிலிருந்த வந்தவர்கள் போன்றும் சிந்திக்கத் தோன்றுகின்றது.
அவர்கள் போட்டோக்களையும், பத்திரங்களையும் ஒவ்வொன்றாகக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அவற்றினை நிதானமாக சாரதாவின் பக்கமிருந்து துல்லியமாகப் பார்ப்பதற்கு ஒருதரும் இல்லை.
நெவீன் photo களைப் பார்த்ததும் இவை அசலாக இருப்பாதாக ஒரு ஊகத்தினை வைத்து சொன்னது சாரதாவின் பக்கமான பின்னடைவாகும். அசலாக இருந்தாலும், ஊகத்தினை வைத்து எதிரிகள் முன்னால் ஒரு நாளும் உண்மையினைச் சொல்லக் கூடாது. அதனை, வந்த அந்த குடும்போ அல்லது வேறு யார் முன்னாலும் சொல்லாமல், வீட்டினுள் தனது குடும்பத்துடன் மட்டும்தான் சொல்ல வேண்டும்.
கண்ணால் பார்த்ததும் கருத்தினைச் சொல்லக் கூடாது. நிதானமாகச் சிந்தித்து சொல்லப்பட வேண்டிய விஷயம் இது. அதுமட்டுமா, காணியினைப் பற்றி வந்த குடும்பம் சொல்லுகையில் கங்கா எடுத்தவுடனே அதனை விற்று விட்டாச்சு என்று அவர்களிடமே சொல்கின்றா. அப்போ உடனே அதில் பங்குக் காசினைத் தாருங்கள் என்று வந்தவவின் மகன் கேட்டான். இதுமட்டுமல்லாமல், சாரதாவும் அதைத்தான் சொல்கின்றா.
மேலும், சாரதாவின் குடும்பம் ஒரு விஷயத்தினையும், serious ஆகக் கதைப்பதாக இல்லை. சும்மா அடிப்பேன், கொல்லுவேன், இவர்கள் இங்கு நிற்க வேண்டாம், போகச் சொல்லுங்கள், சந்தானம் நல்ல மனிஷன் இப்படியான பிழை ஒன்றும் செய்ய மாட்டார் என்று தேவையற்ற கதைகளைக் கதைக்கின்றார்களே தவிர, ஒருவரும் பொலிஸின் முன்னால் sensibleஆன கதையொன்றும் கதைக்கவில்லை.
ஆனால், வந்தவர்களுக்கு, இது எங்கள் சொத்து என்று சொல்கின்றீர்கள் தானே, இதில் பங்கு உண்டு என்று கேட்கிறீர்கள்தானே, பரவாயில்லை நீங்கள், பொலிஸுக்குப் போய் கோட்டில் வழக்கினைத் தொடருங்கள் என்று காவேரி ஒருத்திதான் சொன்னாள். அதனைக் கேட்டதும் சந்தானத்தின் கட்டார் மனைவியாக வந்தவள் மிகவும் பின்னுக்குப் போனா. இயலாது அதற்குக் காலம் எடுக்கும் எங்களால் அதற்கு ஒத்துப் போக முடியாது என்று விட்டா. இதிலிருந்து விளங்குகின்றதுதானே இவர்கள் உண்மாயானவர்களா? இல்லையா? என்று.
ஏன் பணம் செலவாகும் என்று நினைத்தார்களா? அப்படி இருக்காது. ஏனென்றால், கட்டார் மனைவியின் மகன் சொன்னான் பாருங்கள் என்னவென்றால், உங்கள் எல்லாருக்கும் தான் விமான பயணச் சீட்டு எடுக்கிறேன், அங்கு வந்து விசாரிச்சுப் பாருங்கள். அப்போது உண்மை உங்களுக்குத் தெரியும். உடனே, எல்லாருக்கும் விமானச் சீட்டு எடுப்பது என்பது அடுத்தடுத்துக் கூறும் பொய்யாகத் தெரிகின்றது. அத்துடன், ஒருதரும் உடனே எல்லாருமாகச் சேர்ந்து தெரியாத இடத்திற்குப் போகமாட்டார்கள் என்று அவனுக்கு நன்கு தெரியும். அதனால்தான் அவன் அப்படி கூறினான்.
சாரதாவிற்கு கோபமோ பொத்துக் கொண்டு வந்தது. மாமியாரை ஒரு வழி பண்ணி விட்டா. பாட்டியோ சந்தானத்தைப் பெற்றது தப்பா? அல்லது நீ நல்லவள் என்று உன்னைத் தெரிந்தெடுத்ததும் தப்பா? நான்கு பிள்ளைகளையும் வளர்ப்பதற்கு உறுதுணையாக சாரதாவுடன் இருந்தது தப்பா? சாரதாவின் இந்தப் பேச்சு இப்போது தேவைதானா? புருஷனை பொத்தி வைக்காதது உன் தப்புதானே என்ற பாட்டி, அதுதான், சாரதாவின் மாமியார் கேட்டால் என்ன செய்வா சாரதா?
இப்போ, குமரனும் வெளிநாடு கங்காவுடன் இருக்க முடியாது, கொஞ்சம் அமைதி தேவை என்றும், அவளை விட்டு விலத்தி இருக்க வேண்டும் என்றும் போயிருக்கின்றான். அமைதியில்லாமல் போன குமரன் இனி என்ன செய்வானோ தெரியாது? குமரன் மலேஷியாக் கதை ஒன்றினை எழுதி விடுவானோ என்ற சந்தேகம் இப்போ எட்டிப் பார்க்கின்றது.
உங்கள் கருத்துக்கள் என்னென்ன என்று கூறுங்கள்.
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!