posted 11th January 2026
இந்தப் பகுதி சீரியல் றிவூ and analysis ஆனது 06ஆம் திகதியிலிருந்து 09ஆம் திகதிகள் வரையிலான சீரியல்களின் Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
- வீட்டில் உள்ள அனைவருக்கும் வளைகாப்பிற்காக காவேரியும், விஜேயும் புதுப் புடவைகள் வாங்கி வந்தனர். சிந்து வீட்டாருக்கும் அடங்கலாக.
- பொறுத்துக் கொண்டு போன customersக்கும் வளைகாப்பிற்கு அழைத்தலை விடுவோம் என்று விஜேயிடம் கேட்டு, அதனை காவேரியே அழைப்பினை விடுத்தாள.
- வளைகாப்பிற்கு அழைக்கப்பட்ட அனைவரும் வந்திருந்தனர். அங்குள்ளவர்களில் அன்பரசினதும், கிறிஷ்ணாவினதும் முகங்களில் ஒரு விதமான சந்தோஷமும் இருப்பதாகத் தெரியவில்லை.
- வளைகாப்பு நிகழ்வானது நிறைவாக நடந்தேறிக் கொண்டிருந்தது. இந்த பரபரப்பு நேரத்திலும் கிறிஷ்ணா கட்டிட வேலையினைப் பற்றி விஜேயிடம் கலந்தாலோசித்தான். அந்த சமயம் பசுபதியிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பினால், சந்தேகத்திற்குள்ளான கிறிஷ்ணா.
- அடுத்ததாக கிறிஷ்ணா அவனது தாயையும், தங்கையையும் விரட்டிக் கொண்டிருந்ததையும், பின்பு விஜேயின் வீட்டின் CCTVவியின் பதிவு மூலம், பசுபதியின் மகன் றாகாவுடன் கிறிஷ்ணா பேசிக் கொண்டிருந்ததையும் கண்ட விஜேய்.
- Walking இல் கிறிஷ்ணாவைச் சந்தித்த விஜேய், அவனிடம், இந்த ஊராரின் அவனுக்குள்ள தொடர்புகளைப் பற்றி விசாரித்த விஜேய், கிறிஷ்ணாவிடமிருந்து உண்மையினை அறிய முடியவில்லை. இதில், கிறிஷ்ணா சொன்னது உண்மையா அல்லது விஜேய் கண்டது அல்லது ஊகித்தது உண்மையா?
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
மகாநதி - Mahanadhi - 06 - 09 .01.2026
காவேரியின் வளைகாப்பிற்காக ஆயத்தங்கள் ஆரம்பமாகின. புதிய உடுபுடவைகள் காவேரியும், விஜேயும் அனைவருக்கும் வாங்கினார்கள். இதில் முக்கியமானது ஒன்று என்னவெனில், காவேரி கிறிஷ்ணாவின் வீட்டாருக்கும் புடவைகள் எடுப்பதுதான். இது அவர்களின் மேலுள்ள தன் தகப்பனின் இரண்டாவது மனைவி என்பதனால் அல்ல, மாறாக, ஒரு courtesy க்காக. இவ்வாறான ஒரு வழக்கமானது பகைமைகளை உறவுகளாக்குமா? என்பதுதான் ஒரு கேள்வியாக இருக்கின்றது. ஏனென்றால், கிறிஷ்ணாவை உடனே தங்களது கொம்பனியில் வேலைக்கு அமர்த்துகையில் அவசரம் வேண்டாமே என்று விஜேயிடம் சொன்ன காவேரி, இன்று தனது நிகழ்ச்சிக்கு அவர்களையும் நினைவு கூருவதுதான் கொஞ்சம் உதையலாக இருக்கின்றது.
நிகழ்ச்சிகள் நன்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. உறவுகள், அழைப்பாளிகள் அனைவரும் மிகவும் சந்தோஷத்தில் மனநிறைவுடன் வாழ்த்தினார்கள். ஆனால், கிறிஷ்ணாவினதும், அன்பரசினதும் மனங்கள் சரியில்லாதது அவர்களின் முகத்தில் தெரிந்தன.
இன்முகமாக காவேரியாலும், விஜேயின் உறவுகளாலும் அழைக்கப்பட்டவர்கள் உண்மையான மனதுடன் வாழ்த்த வேண்டும். இல்லாவிடில், அந்த நிகழ்விற்கு சமூகம் அளிக்கக் கூடாது. நிகழ்வினில் பங்குபற்றி மனதாலே அந்த இளம் குடும்பத்தினைத் திட்டித் தள்ளக் கூடாது. இது ஒரு துரோகமாகும்.
இவ்வளவு சந்தோஷமான நிகழ்வுகளின் போது, கிறிஷ்ணா விஜேயிடம் அவர்களது வேலை விடயமாக building plansகளைக் காட்டி அனுமதி கேட்டது விஜேயுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அந்த சந்தோஷமானது கன வினாடிகள் நிலைக்கவில்லை. காரணம், கிறிஷ்ணாவின் போனிலேயே அவனுக்கு பசுபதியிடம் இருந்து கோள் வந்ததினை விஜேய் பார்த்து விட்டான்.
இதனை அடுத்தடுத்து நடைபெற்ற சந்தர்பங்களும், சூழ்நிலைகளும் கிறிஷ்ணாவை ஒரு துரோகி என்ற நிலைக்கத் தள்ளுவதாக இருக்கின்றது. இது உண்மையாக இருக்குமா என்பதனை அல்லது பொய்யாக இருக்குமா என்று நினைக்க முடியாமல் இருக்கின்றது. ஆனால், காவேரியிடம் பட்டும் படாமலும் கிறிஷ்ணாவின் விஷயத்தினைக் கூறிய விஜேய், கிறிஷ்ணாவில் ஒரு சந்தேகத்தினை உயிர்க்க விட்டது போன்று தெரிக்கின்றது.
இது பொய்யாக இருக்க வேண்டும் என்றுதான் விஜேய் விரும்புவதாகவும் தெரிகின்றது. அதற்காக விஜேய், கிறிஷ்ணாவிடம் நேற்றைய இரவு உன்னுடன் கதைத்துக் கொண்டு நின்றது யார் என்று கேட்கையிலே கிறிஷ்ணா அப்படி ஒருவருடனும் தான் கதைக்கவி்ல்லை என்று உறுதியாக, ஆனால், ஒரு பயத்துடன் சொல்லும் வகையான behaviourறினை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இது விஜேயுக்கு ஒரு சந்தேகத்தினை கிறிஷ்ணா மேலே ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
அத்துடன், கிறிஷ்ணா விஜேயுடன் கதைத்து விட்டுப் போகையிலே, திரும்பி விஜேயையும், காவேரியையும் பார்த்ததும் விஜேயுக்குச் சந்தேகத்தை உருவாக்கி இருக்கலாம். ஆனால், கிறிஷ்ணா திரும்பிப் பார்த்தது ஒரு ஏதேர்ச்சையாகக் கூட இருக்கலாமல்லவா?
இதேபோலத்தான், வளைகாப்பு நிகழ்விலும் விஜேய் கிறிஷ்ணாவை அவனது தாயுடனும், தங்கையுடனும், என்னத்திற்காகவும், யாருக்காகவும் இங்கு வந்தோம் என்பதனை மறந்து விட்டீர்களா என்பதனைக் கூறியதினையும் அவதானித்துக் கொண்டிருந்தான். இதனைத் துரோகம் என்பதா? அல்லது விளங்காமல் முகபாவனையினையும், கண்ணால் கண்டதையும் வைத்து கிறிஷ்ணா துரோகி என முடிவுகட்ட விட முடியுமா?
ஆனால், விஜேய் கிறிஷ்ணாவிற்கு வேலையினைக் கொடுத்த போது, மிகவும் நன்றியுடையவனாக கிறிஷ்ணா, இந்த வேலை எனது குடும்பத்தினைப் பொறுத்தமட்டில், மிகவும் முக்கியம் என்று கூறியதினையும், அவன் பணிவினையும் மறக்கலாகாது என்பதனை இங்கு குறிப்பிட வேண்டியதாக உள்ளது.
சில சமயம், கிறிஷ்ணாவை பசுபதியின் ஆட்கள் blackmail பண்ணுவதாகவும் இருக்குமெனத் தோன்றுகின்றது. ஏனென்றால், முத்துமலரினதும், சிந்துவினதும் முகபாவனையானது பிழை செய்பவர்கள் போலத் தோன்றவில்லை. சிந்துவிற்கு வேலை கிடைத்தவுடன் அவளின் முகத்தில் ஏற்பட்ட புன்னகையானது உண்மையாக இருப்பதாகவும் தெரிகின்றது. அத்துடன், முத்துமலரோ உண்மையாகவே அவவின் உள்மனதுடன்தான் கொண்டாட்டத்திற்கு பலகாரங்கள் செய்வதற்கு உதவுவதாகவும், அனைவருக்கும் அவரவருக்கு blouseகள் தைத்துத் தருவதாகவும் சொன்னதிலிருந்து தெரிந்தது இவர்களின் மனதில் கள்ளக் குணமோ, உள் நோக்கமோ இருப்பதாகத் தெரியவில்லை.
அதுமட்டுமல்லாமல், ஆரம்பத்திலிருந்து முத்துமலரோ, சிந்துவோ அல்லது கிறிஷ்ணாவோ அதே முகபாவனையுடன்தான் இருக்கின்றார்கள்.
மேலும், என்னத்திற்காக வந்தோம் என்பதானது, சொத்தில் பங்கு எடுக்க வேண்டும், அப்பா சந்தானம் வாங்கிய கடன்களை அடைக்க வேண்டும், தங்கை சிந்துவிற்கு கல்யாணம் பண்ண வேண்டும் என்பனவாகக் கூட இருக்கலாமல்லவா என்றும் நினைக்கலாம்தானே!
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!