Mahanadhi மகாநதி 26.08.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. அதனைக் கைகளினால் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • சாரதாவின் கேள்விகள் பல விஜயிடம் உள்ளன. இது தாயின் ஆதங்கம், மகளுக்கு எதிராக இருக்கும் வீட்டினலே தன் மகள் காவேரி நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழ முடியுமா? இதற்கு என்ன உத்தரவாதம் இருக்கு என்ற கேள்விகள்தான் விஜயிடம் சாரதா கேட்கவுள்ளா.
  • குமரனையும், நெவீனையும் ஒரு மனிதர்களாக கல்யாணி மதிக்கவேயில்லை. இதிலும், தாத்தாவின் roleளிலிலே இவர்களுக்குச் சந்தோஷம் இல்லை.
  • காவேரியின் கோள்களைத் தவிர்த்துக் கொண்டான் விஜய். இதில் விஜயின் understanding இன்மையினைக் காட்டுகின்றது. காவேரியினுடைய குறுஞ் செய்திகளைக் கேட்டு சந்தோஷப்பட்ட விஜேயின் மாற்றத்திற்குக் காரணம் என்ன?
  • நம்பிக்கை என்பது வேறு, வீம்பு காட்டுவது என்பது வேறு. இது விஜயின் விஷயத்தில் தெரிகின்றது.

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.

நன்றி.

மகாநதி - Mahanadhi - 26.08.2025

பலவேறான பிரச்சனைகளினுள்ளே சிக்கித் தவித்த காவேரிக்கு, கங்காவின் தலை நீவல் ஒரு ஆறுதலாக இருந்தது. எனக்கு முதலே உனக்கு பிள்ளை தங்கியுள்ளதனை கங்கா வெகு சந்தோஷத்திலே காவேரிக்குச் சொன்னாள். இதுதான் கங்காவின் உள்மனசு. எவ்வளவு தங்கமாக உள்ளது என்று இங்கு பார்த்து பூரிக்க வேண்டியுள்ளது.

விஜய் காவேரியின் குறுஞ் செய்தியினால் காட்டிய சந்தோஷம், காவேரியுடன் கதைக்கையிலே இல்லையே! ஏன்? கோபமா? அல்லது ஊடலா? அனேகமாக ஊடலாகத்தான் இருக்கும். விஜேயுக்கு தன்னை ignore பண்ணியது கொஞ்சம் மனத்தினை உறுத்தி இருக்கலாம். ஆனால், காவேரியிடம் கோவிப்பதற்கு அவ்வளவிற்கு விஜேயுக்கு மனம் வராது.

எங்கே போனார் விஜய் என்று தாத்தா சொன்னதினை நம்புகின்றார்கள் குமரனும், நெவீனும். ஆனால், தங்களுக்கு நடந்த அவமானத்தினை இவர்கள் காவேரியின் வீட்டில் சொல்லவில்லை. சொன்னால் சாரதா அத்தை குளம்பிவிடுவா என்பதனால்.

விஜய் தானாக வந்தால்தான் உண்டு. இல்லை என்றால், இரண்டு நாட்கள் பொறுக்க வேண்டியதுதான்.
விஜேய் - காவேரின் வாழ்க்கையானது மிகவும் சிக்கலானது. விஜயின் வீட்டில் உள்ள நிலைமை காவேரிக்கு உகந்ததாகத் தெரியவில்லை. அதாவது, கல்யாணிப் பாட்டியின் இந்தப் பிடிவாத்த்தி்ற்கு பசுபதிதான் காரணம் என்று எனக்குத் தெரியவில்லை. மாறாக, காவேரியின் வீட்டின் நிலைமைதான் காரணம். அதாவது, அவர்களின் வறுமை நிலைமைதான்.

அமைதியாகவும், பதுமையாகவும் இவ்வளவு காலமும் காட்டிக் கொண்ட கல்யாணி பாட்டி இப்போ தலைவிரித்தாடுவது என்பது, முன்பு இருந்த அவவுடைய நற்குணமானது என்பது பொய்யான வடிவம். இப்போது அவ காட்டும் படம் இருக்கே இதுதான் அவவுடைய நிஜமான தோற்றம்.

ஒரு இடத்திலே கல்யாணி பாட்டி சொல்கின்றா, நான் இவ்வளவு காலமும் இப்படி ஏதாவது கதைத்தனானா? இப்பதானே நான் கதைக்கின்றேன் என்றால், அப்போது அவ நடித்தா, இப்போது அவ தனது சுய ரூபத்தினைக் காட்டுகின்றா என்பதுதான். அதுமட்டுமல்லாமல், தாத்தாவினை அடக்கி வைக்கின்றா. தாத்தாவும் ஒன்றும் கதைக்க முடியாமல் மௌனமாகின்றார். இப்படியான நிலையினிலே காவேரி என்னென்று விஜயின் வீட்டினிலே வந்து சீவிக்க முடியும்?

சாரதாவின் ஆதங்கம் இப்போது சரியென்றுதானே சொல்ல வேண்டும். ஆனால், சாரதாவின் கேள்விகளுக்கு விஜய் சரியான பதில்களைச் சொன்னால், அதை வைத்துக் கொண்டு காவேரி அங்கு நிம்மதியாக வாழ முடியும் என்று உத்தரவாதம் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகின்றது.
சொத்திற்காகத்தான் காவேரி தான் கர்ப்பம் என்று சொல்லிக் கொண்டு வந்தாள் என்று கல்யாணிப் பாட்டி சொல்வதற்கு வாய்ப்புகளும் உண்டு. சொல்லவும் செய்வா. ஆனால், விஜய் இல்லாத நேரம் காவேரியை நொய் நொய் என்று கொண்டிருந்தால் காவேரியால் என்னதான் செய்ய முடியும்.

காவேரி சொல்வது போல் அன்பிற்காக ஏங்குகிறார் விஜேய். அவர் நல்லவர், உன்னை விட நல்லாகப் பார்த்துக் கொள்ளுவார் என்பது உண்மைதான். ஆனால், காவேரி விஜேயின் வீட்டில் இருக்கையிலே, 24 மணி நேரமும் காவேரியைத் தன் கண்காணிப்பில் வைத்திருக்க முடியாதுதானே! தனிமையில் இருக்க வேண்டிய நேரம் வந்துதானே தீரும். அப்போது காவேரியால் என்ன செய்ய முடியும்? தாய் வீட்டில் அவளால் சொல்லத்தான் முடியுமா? காவேரியும் அப்படிக் குறை சொல்லவும் மாட்டாள்.

கல்யாணிப் பாட்டியும், றாதா சித்தியும் இங்கு வீட்டிற்கு வந்ததினை காவேரியோ விஜயிடம் சொல்ல மாட்டாள். வீட்டில் வேறு ஒருதரும் சொல்ல மாட்டார்கள். ஆனால், சாரதா இதனைச் சொல்லுவா. சொல்லத்தான் வேண்டும். சொல்லி அதனைப் பற்றிய விபரங்களைத் தாயானவள் கேட்டு அறிந்து கொள்ள வேண்டிய அவசியமாகின்றது.

இனி நடக்கவிருக்கும் வீட்டின் நிஜங்களைப் பார்க்கத்தானே போகின்றோம்.

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் என்பதனையும், உங்கள் கருத்துக்களையும் Description னில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.

வணக்கம்!