posted 5th August 2025
இந்தப் பதிவானது, 29, 30ஆம் திகதிகளை உள்ளடக்கியுள்ளது.
- தமிழினை குத்திக் காட்டி, அவளுடைய மனதினை உடைப்பதற்காக சிபீயும், அவனுடைய தாய் மீனாவும் அடிக்கடி சுறண்டிக் கொண்டிருந்தார்கள். இப்படித்தான், பூனை நொஞ்சு போனால், எலிக்குக் கொண்டாட்டமாம்.
- இவர்களுக்குத்தான் தமிழின் வாழ்க்கை வரலாறு தெரியாதுதானே! தமிழை வேலைக்கு அலையும் ஒரு நடுத்தர பெண்ணென்று தானே தெரியும்.
- தன் உயர்ச்சியினை மறந்து தன் தங்கையின் வாழ்க்கைதான் முக்கியம் என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றாள், தமிழ்.
- சிபீக்கு ஒரு உருப்படியான நண்பர்களோ, உறவுகளோ இல்லை, நல்விதமாக வளர்வதற்கு. தாய்மாமனைப் பார்க்கவில்லையா?
- வில்லங்கள் விளையாடத் தொடங்கிவிட்டது.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 29, 30.07.2025
கோட்டலில் சாப்பிட்டவர்களுக்கு, வாந்தி என்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இது பெரிய செய்தியாகப் பரவிக் கொண்டிருக்கின்றது. அப்படி நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பது தமிழின் விவாதம், நம்பிக்கை. ஆனால், சிபீ அதனை எப்படியாவது மூடி மறைக்க வேண்டுமென்று சிந்திக்கத் தொடங்கினான்.
Quality control ஆட்கள் வழமையாக வருவது மாதிரி இல்லை. வேறு விதமாகக் கதைக்கின்றார்கள். அவர்களின் சோதனையும், கதைகளும் வித்தியாசமாக இருக்கின்றது என்று வினோத், தமிழுக்குச் சொன்னார். Quality control ஆட்களும் சோதனை செய்வதற்காக சமையல் அறைக்குள்ளும் வந்து சோதனை செய்தார்கள். அச் சோதனையில் பழுதடைந்த இறைச்சி இருப்பதனைக் கண்டெடுத்தார்கள். அவற்றினை ஆதாரத்திற்காக sample களை எடுத்தனர்.
இந்தச் செய்தியானது காட்டுத் தீ போல எல்லா இடமும் பரவியது. இதனை எப்படி கட்டுப்படுத்துவது என்பதும், என்னென்று நல் பெயரினை மீளப் பெறுவது என்பதுதான் இங்கு கருப்பொருளாக இருந்தது.
ஜானு குளம்பிப் போனா. தமிழுடனும் ஜானு கொஞ்சம் இறுக்கமாகக் கதைக்க வேண்டியதாயிற்று. ஆனால், தமிழ் ஜானுக்குச் சொன்னாள், அம்மா உங்களை ஒரு போதும் ஒருதருக்கு முன்னால் தலைகுனிய விடமாட்டேன் என்று உறுதியளித்தாள்.
சிபீயின் வழியானது, தப்பு நடந்து போயிற்று அதனைப் பரவ விடாமல், காசினை நஷ்ட ஈடாகக் கொடுத்து, செய்தியானது மேலும் பரவ விடாமல் தடுப்பதும், அவ்வாறு நடந்த தவறினை நாங்கள் வேலைக்கு அமர்த்தினவர் ஒருவர்தான், அவர்தான் தமிழரசி, என்றும் அவரை நாங்கள் வேலையினை விட்டு தூக்கிவிட்டோம் என்றும், அதனை மீடியாவின் முன்னால்தான் செய்ய வேண்டும் என்றும், ஜானுவை மீடியாவிற்கு முன்னால் மன்னிப்புக் கேட்கும்படியாகவும் இதனால், எங்கள் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்றும் திட்டமிட்டான் சிபீ.
சிபீயின் முடிவினை ஜானுவும் ஏற்றுக் கொண்டா.
சிபீ எடுத்த முடிவு சரியென்று தட்டிக் கொடுத்தார், கணேஷன். இதனால், சிபீ நன்கு சந்தோஷமடைந்தான்.
ஆனால், தமிழ் வேறு கோணத்தில் அணுகினாள். இப்படியான பிழை நடப்பதற்கு வாய்ப்பில்லையே என்றும், தனது வேலை ஆட்களை விசாரித்தாள். கெட்டுப்போன இறைச்சி உள்ள இடத்திலிருந்து ஆராயத் தொடங்கினாள். அவளுடைய கண்ணுக்கு CCTV தென்பட்டது. அதன் பதிவுகளைச் சோதனை செய்வதற்காக CCTV அறைக்குள் வினோத்துடன் போய் Kitchen னுடைய CCTV footageஜினை பார்ப்பதற்குப் போனாள் தமிழ். CCTV footageஜினில் றைவர் பாஸ்கர் அகப்பட்டான்.
பாஸ்கரின் வீட்டிற்குப் போன தமிழும், மனேஜர் வினோத்தும் பாஸ்கரைச் சந்தித்தனர். குற்றம் செய்ததற்காக தமிழ் பாஸ்கரின் கன்னத்தில் அறைந்து விட்டாள். அந்த அடியில் விறைத்துப் போனார், மனேஜர் வினோத். உடனே, மீடியா பல கேள்விகளைக் கேட்டு ஜனாவைச் சங்கடப்படுத்து முன்பு றைவர் பாஸ்கரை அங்கு கூட்டிச் சென்று, ஜனா அம்மாவுக்கு ஏற்பட்ட களங்கத்திலிருந்து விடுவிப்பதற்காக தமிழும், வினோத்தும், பாஸ்கரும் விரைந்தனர்.
சிபீ, ஜனாவினால் அழைக்கப்பட்டான். வழமைபோல சீபி தன்னுடைய சிட்டுடனும், வால்களுடனும் உள்ளே வந்தான். ஆனால், ஜனா மிகவும் சந்தோஷமாக தமிழுடன் கதைப்பதை இட்டு தடுமாறினான் சிபீ. என்ன நடக்கின்றது என்றே புரியாமல் எல்லாரும் தலையைச் சொறிந்தனர்.
அப்போதுதான், ஜனா, அறிவித்தா இன்றைய இரண்டாம் போட்டியிலே தமிழ்தான் வென்றா என்று.
ஒன்றுமே விளங்காமல் அனைவரும் திகைத்ததுமல்லாமல், ஒன்றுமே உரிமை இல்லாத சாம் தன் வாலினை உள் நுளைத்தாள். கோபம் கொண்ட ஜனா அவளை வெளியே போகச் சொல்லு என்று சிபீயிடம் அறுத்துறுத்துச் சொன்னா. சாமுடன் கூடியவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
Food poisoning தான் போட்டியாக ஜனா ஒழுங்கு படுத்திய போட்டியாகும். எல்லாம் நோயாளிகள் உட்பட எல்லாரும் ஜனாவின் ஆட்கள்தான். திகைத்துப் போய் நின்ற சிபீயும், மாமனும்.
அடுத்ததாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் business விரிவாக்கத்திற்கு ஜனா foodsற்கு வருகை தந்திருந்தனர். சம்மீத்தா, ஓடிப்போய் சிபீயிடம் இந்த வெளிநாட்டு முதலீ்ட்டாளர்களைக் கவிழ்த்தி என்றால் நீ இலகுவாக தமிழை தோற்கடிக்கலாம். இதைக் கேட்டதும், தன் மூளையினைப் பாவிக்காத சிபீ உடனே அந்தக் கோணத்திலே சிந்திக்கலானான். சொந்தப் புத்தியினைப் பாவிக்காமல் தோற்றுப் போனோமே, தமிழை தோற்கடிக்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கையிலே, உண்மையான, தூய்மையான சிந்தனை வராது. இந்தக் கூட்டத்திலே சிபீயின் business கதை முடிந்ததும், தமிழ் எழுந்து நின்று உங்கள் அனைவருக்கும் இன்று எங்கள் வீட்டில்தான் மதிய உணவு என்று அறிவித்தாள்.
இது நல்ல ஐடீயாவாக இருப்பதனை கூறிக் கொள்ளலாம். ஏனென்றால், இவர்களின் business உணவுடன் சம்பந்தமானதுதானே. சிபீமாதிரி சும்மா, மற்றவர்களை விழுத்த வேண்டும் என்று யோசித்தால், இறுதியாக மண் கௌவ்வ வேண்டியதுதான்.
இவ்வாறான வேறுபட்ட வாழ்க்கை நிலைகளைச் சித்தரிக்கின்றது எமது Healthy Life Hacks Channel ஆகும். நீங்கள் description னில் உள்ள இந்த லிங்கினைக் https://www.youtube.com/@Healthylifehacks-b7z கிளிக் செய்து அதில் உள்ள உண்மை கலந்த கதைகளினை கேட்பதுமட்டுமல்லாமல், இவற்றினால் எவ்வாறு ஒருவரின் மனமும், உடலும் பாதிக்கப் படுகின்றது என்பதனையும், இவ்வாறான வாழ்க்கை நிலைகளை எவ்வாறு தவிர்த்துக் கொள்ளலாம் என்பதனையும், இதனால், சுக வாழ்க்கையினை நாங்கள் சம்பாதித்துக் கொள்ளலாம் என்பதனையும் அறிந்து கொள்ளலாம்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் என்பதனையும், உங்கள் கருத்துக்களையும் Description னில் சொல்லுங்கள்.
இனி;
- இது ஜனா வைக்கும் மூன்றாவது போட்டியா? இல்லை என்ற நினைக்கின்றேன். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்.
- தகப்பனை நினைப்பூட்டும் சுகமில்லாத தங்கைக்கு என்ன பதில் தமிழ் சொல்லப் போகின்றாள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!