
posted 7th March 2023
யாழ்ப்பாணம்நல்லூரில் அமைந்துள்ள வரலாற்றுசிறப்புக்கொண்ட மந்திரிமனைக்குள் எவரும் நுழையவேண்டாம் என தொல்பொருள் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.
அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் உள்ளது. அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டுள்ளன. இதனால் அதற்குள் யாரையும் நுழையவேண்டாம் என்று தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)