posted 3rd August 2025
உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
இன்றைய சீரியலில் காவேரி மயங்கி விழுந்ததனால் விஜயிடம் இருந்த கலக்கமும், பயமும் அவனுக்கு அளவுகடந்த மகிழ்ச்சியினைக் கொடுத்தது.
அத்துடன், இருவரும் தங்களுக்குள் உள்ள சந்தேகங்களை மௌனமாகத் தீர்த்துக் கொண்டனர்.
இவ்வாறுதான் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் பின்னால் ஒரு சந்தோஷத்தினை கொண்டுவரும் என்று எடுத்துக் காட்டும் இந்த உன்னதமான சீரியலினைப் பார்த்து அனுபவியுங்கள் – அறிவினைப் பெருக்குங்கள்.
விஜேக்குரிய முக்கியமான சந்தர்ப்பமானது காவேரியுடனான சந்திப்புத்தான். காவேரி போடவுள்ள ஸ்ரோலில் காவேரியைச் சந்தித்தான் விஜய். தன் மனதைத் திறந்து விஜய் காவேரியுடன் கதைத்தான். தன்னுடைய உண்மையான அன்பை காவேரி உணராவதவளல்ல என்று விஜேய் confirm பண்ணிக் கொண்டான். காவேரியின் மேலே விஜேயுக்கு அன்பும், நம்பிக்கையும் இல்லாமல் இல்லை. சந்தர்ப்பம், சூழ்நிலை, contract கல்யாணம், கல்யாணத்தின் கனாகனத்தினை உணராமல் joke ஆக deal பண்ணிய விஜயின் விளையாட்டுத்தனம், இதனால் ஏற்பட்ட அவமானங்கள், அதனால் காவேரியின் வீட்டார் விஜேய் மேல் கொண்ட கீழான opinionகளெல்லாம் சேர்ந்துதான் விஜேயினை இந்த நிலைக்குத் தள்ளிச் சென்றுள்ளது.
மகாநதி - Mahanadhi - 31.04.2025
விஜய், காவேரியிடம் எல்லாவற்றையும் அதாவது, வெண்ணிலாவின் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வினைக் கண்டுவிட்டு, வெண்ணிலாவினை முழுமையாக தன் மனைவியாக எல்லார் முன்னும் ஏற்றுக் கொண்டு தன் வீட்டிற்கு உரிமையுடன் கூட்டிச் செல்வதுதான் விஜயின் அந்த அர்த்தம்.
விடைபெற்றுச் செல்கையில் விஜய் திரும்பிப் பார்க்கையில் காவேரியின் நிலைத் தடுமாற்றம் விஜயை திடுக்கிட வைத்தது. காவேரி என்று உரக்கக் குரலில் கத்திக் கொண்டு stallஐ நோக்கி ஓடிச் சென்று அலறத் தொடங்கினான். கையால் காவேரியைத் தூக்கித் தாங்கிய விஜய் ஏன் மயங்கினாள் என்று ஏக்கத்தில் தூக்கிக் கொண்டு வைத்தியசாலைக்கு விரைந்தான்.
விஜயுக்கோ தாத்தா, பாட்டியின் பேச்சு ஒருபக்கம், காவேரியின் தாய் சாரதாவின் பேச்சோ மறுபக்கம் காணாததென்று வைத்தியசாலையில் டொக்டரும் பேசினாதால் நிலைகுலைந்து விடுவானென்னால், விஜய் சொக்கிப் போனான். என்ன காவேரி conceive வாக இருக்கிறாளா? என்ன, உங்களுக்குத் தெரியாதா? என்று டொக்டர் கேட்கையிலே காவேரியைக் காட்டிக் கொடுக்காமல், டாக்டர் காவேரியைப் பார்க்கலாமா என்று உள்ளே சென்றான் விஜய்.
ஏன்டி சொல்லாமல் மறைச்சாய் என்று விசனித்தான், விஜய். காவேரி தன் மௌனத்தால் பல வார்த்தைகள் விளக்கிக் கொண்டிருந்தாள்.
சந்தோஷத்தில் மிதந்தும் மிதக்காமலும், கேட்டதும் கேட்காததுமாக shockகில் இருந்தான் விஜய்.
என்னென்று இந்த சந்தோஷத்தினைக் கொண்டாடப் போகின்றான் விஜய். காவேரியின் நினைவுகள் மாறுமா? காத்திருந்த காவேரியின் கண்கள் கலங்குமா? சந்தோஷத்தில் திகைக்குமா?
இதெற்கெல்லாம் காரணம் யாரு சொல்லுங்கள் பார்ப்போம்? Description னில் சொல்லுங்கள்.
அடுத்த சீரியல் றிவூவில் சந்திக்கின்றேன்.
நன்றி
வணக்கம்.