posted 5th August 2025
உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
- வெண்ணிலா விஜயை விட்டு ஒதுங்கி தன் கிராமத்திற்குப் போவதற்கு மாமன் நம்பிறாஜனுடன் தயாராகின்றாள். இது உண்மையாகவும், நிரந்தரமாகவும் இருக்குமா?
- காவேரியைக் கூட்டிக் கொண்டு விஜேய் தன் வீட்டிற்கு போவதற்கு முடிவெடுத்துவிட்டான். ஆனால், இப்போது அல்ல, நாளை என்று உறுதி கொள்கின்றான். இது எப்படி சாத்தியமாகும் என்று காவேரிக்கு ஒரு doubt. அத்துடன் நம்ம அம்மா சாரதா சந்தானம் இருக்குதே. சரி பறவாயில்லை சமாளிப்போம். இப்படி இருக்கையிலே எங்களுக்கு மட்டும் doubt இருக்காதா?
- கற்பனையில் உறங்கினாள் காவேரி. விஜேய் மட்டும் விதிவிலக்கா.
- பெண்களாகிய எம்மால் இதெல்லாம் செய்ய முடியாதா? என்று வாழ்க்கையினை வாழ்ந்து முடித்ததுகள் சூழுரை.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
மகாநதி - Mahanadhi - 30 & 31.07.2025
எவ்வளவோ பிரச்சனைகளைத் தாண்டி, மறியல் வாழ்க்கையினையும் அனுபவித்து, வெளியே கொணரப்பட்ட விஜேய், காவேரியுடன் சேர்ந்து வாழ்வதற்கு முனைகையிலே, வாழ்க்கையினை அனுபவித்து பேரப்பிள்ளைகளின் வாழ்க்கையிலே இன்பத்தினை அனுபவிப்பதனை விட்டு அந்த இளசுகளைப் பிரித்து வைத்து அழகு பார்ப்பதனை என்னென்று சொல்வது?
இப்படியாக சிலர் உள்ளனர். தங்கள் சுகத்திற்காக தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையிலே புகுந்து விளையாடி அவர்களுக்கு தாங்கள் நல்லவர்களென காட்டிக் கொண்டு, தாங்கள் இருக்கும் வரை சொகுசாக வாழ்வதற்கு செய்ய வேண்டியதெல்லாம் செய்பவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள்.
இரவோடிரவாக, தாய் கல்யாணியும், மகள் றாதாவும் திட்டம் போட்டு முதன்முதலாக காவேரியையும், விஜையையும் பிரித்திடுவோம் என்றனர். விடிந்தவுடனே கல்யாணி, காவேரியை கோவிலுக்கு வரச்சொல்லி, காரசாரமாகப் பேசினா, உனக்கு என்ன விஜயோட வாழ விருப்பமா என்று கேட்டதற்கு, காவேரி, ஆமா என்று தலையை ஆட்டியதுதான், கல்யாணி, காவேரியைத் திட்டித் தொலைத்தா.
இதுமட்டுமா நடந்தது? றாதா காவேரியின் வீட்டிற்குப் போய், சாரதாவிடம், காவேரி இனி எங்களுக்குத் தேவையில்லை என்று எல்லாருமே முடிவெடுத்து விட்டோம் என்று திட்டவட்டமாகச் சொன்னா. ஏன் இவ இப்படிச் சொன்னா? தனது மகன் அஜயுடைய வாழ்க்கை நல்லாக வேண்டும் என்பதற்குத்தான். இது சுயநலத்தின் உதாரணம்.
இங்கு, ஒரு குடியைக் கெடுத்துக் கொண்டு, தன் குடி வாழ வேண்டும் என்று அர்ச்சனை பண்ணினால், இந்தக் குடி விளங்குமா? விளங்கவே விளங்காது.
இப்படிப் பார்க்கப் போனால், பசுபதியும், றாகினியும் இவர்களை விட நல்லவர்கள் என்றுதான் கூற வேண்டும். அவர்கள் நேருக்கு நேர் மோதுபவர்கள். இந்தப் பெரியவர்கள் என்று சொல்லப் படுபவர்கள் செய்கின்ற வேலையைப் பார்த்தீர்களா?
இதுதான், கூட இருந்து குளி பறிப்பது என்பது.
இவ்வாறான வேறுபட்ட வாழ்க்கை நிலைகளைச் சித்தரிக்கின்றது எமது Healthy Life Hacks Channel ஆகும். நீங்கள் description னில் உள்ள இந்த லிங்கினைக் https://www.youtube.com/@Healthylifehacks-b7z கிளிக் செய்து அதில் உள்ள உண்மை கலந்த கதைகளினை கேட்பதுமட்டுமல்லாமல், இவற்றினால் எவ்வாறு ஒருவரின் மனமும், உடலும் பாதிக்கப் படுகின்றது என்பதனையும், இவ்வாறான வாழ்க்கை நிலைகளை எவ்வாறு தவிர்த்துக் கொள்ளலாம் என்பதனையும், இதனால், சுக வாழ்க்கையினை நாங்கள் சம்பாதித்துக் கொள்ளலாம் என்பதனையும் அறிந்து கொள்ளலாம்.
இனி,
- காவேரி என்னதான் முடிவெடுப்பா? விஜேயை விட்டு விலகுவாளா? சாரதா, இனி காவேரியை விஜய் வீட்டிற்கு அனுப்ப சம்மதிப்பாவா? அது நடக்கவே நடக்காது, ஏனென்றால், அங்கு போய் காவேரி நிம்மதியாக இருக்க மாட்டாள் என்பதனால்தான்.
- ஆனால், காவேரியுடன் சேர்ந்து விஜய் கிராமத்திற்குப் போவதற்குக் கூடுதலான வாய்ப்புகள் அதிமாக இருக்கின்றது.
பார்க்த்தானே போகின்றோம்.
நீங்கள் எனக்கு மின்னஞ்சலில் உங்கள் கருத்துக்களை சொல்வதற்கு நன்றி. ஒரு வேண்டுகோள், எனது கொமேன்ற் பகுதியில் உங்கள் கருத்துக்களைச் சொன்னால், அனைவருக்கும் நன்மையாக இருக்குலாம் என்று நினைக்கின்றேன். ஆனால், உங்கள் தனிப்பட்ட பிரத்தியேகமான கருத்துக்களை மின்னஞ்சலில் எழுதுங்கள்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் என்பதனையும், உங்கள் கருத்துக்களையும் Description னில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!