posted 3rd August 2025
மகாநதி - Mahanadhi - 07.05.2025
இன்றைய சீரியலில், காவேரியும், விஜேயும் தனிமையில் ஒருவருடன் ஒருவர் மனதைத் திறந்து கதைத்து ஒருவரை ஒருவர் கொன்றாக்ட் முடிந்த பின்பு கதைக்காமல் இருந்ததனால் ஏற்பட்ட இடைவெளியினை நிரப்புவதற்கு ஒதுங்குகையில், சாரதா, காவேரி அப்பள அறிமுகத்தில் ஸ்ரோலில் வெகு ஆர்வமாக இருக்கின்றா என்று நினைக்கையில், மாமி, அதுதான் சாரதாவின் வீட்டுக் காரி, காவேரி இனி மைக்கைத் தூக்கிக் கொண்டு வருபவர்களை வரவழைக்கும் சந்தர்ப்பம் ஏற்படுமானால் நீங்கள் வீட்டைக் காலி பண்ண வேண்டும் என்று கூறியதும், சாரதாவின் குடும்பத்திற்கு ஒரு இழுக்கை ஏற்படுத்திவிடுமோ என்று துக்கத்தில் ஆழ்ந்ததையும் இனி என்னதான் காவேரியும், விஜேயும் என்ன செய்யப் போகின்றார்கள் என்பதனையும் பார்ப்போம்.
காவேரியும், விஜேயும் உணர்வு பூர்வமாக மனதார ஒருவரை ஒருவர் இணைத்துக் கொள்ளத் தனிமையினைத் தேடி வந்து இப்படித்தான் வாழலாம் என்று ஒரு ஒத்திகை பார்த்துக் கொள்கின்றனர் என்று சொல்லக் கூடிய வகையாகத் தென்படுகின்றது. Guest houseல் ஒருதரும் தொந்தரவு பண்ணக் கூடாதவாறு அதுவும் குறிப்பாக micகைத் தூக்கிக் கொண்டு வருபவர்கள் உள்ளே வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அங்குள்ள பராமரிப்பாளர்களிடம் கூறிவிட்டு இருக்கின்றனர் விஜேயும், காவேரியும்.
மகாநதி - 07.05.2025 - Mahanadhi
ஆனால், ராகினியும், பசுபதியும் சும்மா இருப்பாங்களா? – அதாவது, இதுகள் கெட்ட கிரகங்களாச்சே! அடி வாங்கியது காணாததென்று பசுபதி தன்ர குள்ளத் தனத்தைக் கைவிடுறதாக இல்லை.
வாழப்போன றாகினியோ, பசுபதியின் சொந்த இரத்தமாச்சே! பசுபதிக்கு விஜேயின் வீட்டில நடப்பதை எல்லாம் update பண்ணி கொண்டிருப்பதெல்லாம் றாகினிதேனே! பசுபதியும், றாகினியும் எல்லா விஷயங்களுக்கும் பின்பக்கம் இருந்து எல்லாரையும் push பண்ணி முன்னுக்கு அவர்களை எல்லாம் வில்லங்கங்களுக்குள்ளே தள்ளி விட்டு தாங்கள் தப்பித்திக் கொள்ளும் நரித்தனம் கொண்ட இவர்கள் யாரு, விஜயின் உறவுகள்தானே!
அதுமட்டுமல்லாமல் வெண்ணிலாவின் மாமனாரை, பசுபதியும், றாகினியும் brainwash பண்ணி விஜேயுக்கும், காவேரிக்கும் எதிராக வில்லங்கமான திட்டங்களைத் தீட்டி ஒரேயடியாக காவேரியை ஒருவழி பண்ணி அவளுடைய வாழ்க்கை அழித்து சின்னாபின்னமாக்குவதுதான் இவர்களுடைய முழுநேர வேலையுமாச்சு.
வெண்ணிலாவின் மாமனாரோ தன் ஊருக்குப் போய்விட்டார், தன் கிராமத்தவரை, இனஞ் சனத்தை எல்லாரையும் இங்கு கூட்டிவந்து, கமராக் காரரோட சேர்த்து காவேரியின் வாழ்க்கையினைக் குலைத்து சுக்கு நூறாக்குவதற்கு வெண்ணிலாவின் மாமனாரை prepare பண்ணி அனுப்பிவிட்டதுமல்லாமல் பசுபதியும், றாகினியும் கங்கணங்கட்டி அலையுதுகள்.
இந்த கூட்ட அங்கத்தவர்கள் காணததென்று அன்பும், அவன் மகனும் பசுபதியுடன் கூட்டுச் சேர்ந்தனர், விஜேயை ஒரு கொலை காரனென்று பழியைப் போட்டு உள்ளே தள்ளிப் பழிவாங்கத்தான் இந்தக் கூட்டுச் சதியினைச் செய்வதற்குச் சேர்ந்துள்ளனர்.
வாழ்க்கையில ஒருவரைக் கவிழ்க்க வேண்டுமென்றால் வேறெங்கேயும் அதற்குரியவரைத் தேட வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், அவர்கள் உங்களேடயும், உங்களுக்குரியவர்களாவும் உங்கள் நிழலாக இருப்பார்கள். அவர்களை உங்களால் அவ்வளவு சுலபமாக அடையாளம் கண்டு கொள்ளவும் முடியாது. இதற்கு ஒரு உதாரணமாக இப்பதைய இந்த சீரியல் விளக்குகின்றது.
வாழ்க்கையில நல்லவர்களாக வாழுவது என்றால் றொம்ப றொம்ப கஷ்டம் என்று நான் சொல்ல வேண்டிய இல்லை. நீங்க இதைப் பற்றி என்ன சொல்கிறீங்கள்? Comment பகுதியில உங்கள் கருத்துக்ளைச் சொல்லுங்கள்.
இவ்வளவு பிரச்சனைகளை என்னென்று விஜய் சமாளிப்பான்? காவேரி என்னதான் செய்வாள்? அவளுக்கு அடிமேல் அடி விழுந்தால் காவேரியும் என்னதான் செய்வாள்?
இதுமட்டுமல்லாமல் சாரதாவின் owner ஒரு பக்கம். காவேரியின் கல்யாணம் எப்படி நடந்தது என்று கேவலமாக கதைத்ததுமல்லாமல், நீங்கள்தானே அப்படி காவேரியை காசுக்காக அனுப்பி வைத்தனீங்கள் என்று சாரதாவை குறைகாட்டி வீட்டுக்காரி சொன்னதும் சாரதா உடைஞ்சு போனாள். குடும்பமே உறைஞ்சு போயிற்று.
இன்று, உங்களோட கூட இருந்தது எனக்கு இந்த ஆயுளுக்கே காணும் என்று விஜயிடம் காவேரி சொன்னது ஒரு அபசகுனமான ஒப்பனையாக இருக்கின்றது.
இவ்வாறு காவேரி கூறியது அவளையும் அறியாமல், அவள் உள்ளத்தில் இருந்த வராததும், அல்லது அவளது மூளைக்கே தெரியாமல் வெளிப்பட்ட இந்த வெளிப்பாடானது, அவளது வாழ்க்கையின் எதிர் கூறலா? அப்படி என்றால், அவள் வாழ்க்கை காவியமாகப் போகின்றதா அல்லது கானலாக போய்விடும் என்ற எதிர்வு கூறலா? – பொறுத்திருந்துதான் நாங்கள் பார்ப்போமே. இக் கேள்விகளை உங்களிடம் விடுகின்றேன்.