posted 6th August 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். வாழ்த்துக்கள்!
- காவேரி – விஜேயினைப் பிரித்துவிட முழு முயற்சியில் இறங்கிய விஜேயின் பாட்டி, கல்யாணி.
- பசுபதிக்கு ஜாமீன் கிடைத்து வெளியே வருவதாக அன்பு தன் மனைவி றாதாவிடம் அறிவிப்பு. இதனை வைத்து ஊதிப் பெருசாக்கும் பாட்டி.
- காவேரியிடமிருந்து எதுவுமே அறிய முடியாமல் தவிக்கும் நெவீன். காவேரியின் மௌனத்தினை உடைத்தெறிந்த குமரன்.
- காவேரியின் வீட்டிற்கு, றாகினியுடன் வந்த பசுபதி – இது பீதியினைக் காவேரி வீட்டாருக்குக் கிளப்புமா? அல்லது, காவேரி, பசுபதி மறியலிலே இருக்கையிலே சொன்னதினைச் செய்வாளா?
அதுதான், non-bailable offence, இற்கு ஏதாவது பண்ணுவாளா?
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
மகாநதி - Mahanadhi - 05.08.2025
காவேரி, தன் வாழ்க்கையினைச் சிந்திப்பாளா, தன் வயிற்றினுள் உள்ள சிசுவை யோசிப்பாளா? அல்லது, பசுபதியினால் இனி வரப்போகும் பிரச்சனைகளையோ, அவனை என்னென்று அடக்கி வைப்பது என்று திட்டம் தீட்டுவாளா? அதுமட்டுமல்லாமல் விஜேய் வீட்டாருக்கு எந்தவிதமான ஆபத்துகளும் வராமல் காவேரி ஏதாவது செய்ய வேண்டுமல்லாவா? அதனைச் செய்வாளா?
இவ்வளவும் இருக்கையிலே, இவளாலோ அல்லது இவளது குடும்பத்தாலோ என்னென்று நிம்மதியான வாழ்க்கையினை வாழ்ந்திட முடியும்?
இதை விட, விஜயின் பக்கம் இருந்து பாட்டியினாலும், அத்தையினாலும் வரும் எதிர்ப்புகளையும் என்னென்று காவேரி சமாளிக்கப் போகின்றாள்?
இவர்கள் மட்டுமா, அன்பரசுவின் கூட்டு பசுபதியுடன் இருப்பதனால், அவனாலும், அவன் மகன் அஜயாலும் என்னென்ன பிரச்சனைகள் காவேரிக்கும், அவளது குடும்பத்திற்கும், விஜேயுக்கும் ஏற்படப் போகின்றது என்று, இப்படி எத்தனை பிரச்சனைகளை காவேரி யோசிக்கப் போகின்றாளோ தெரியாது.
இத்தனைக்கும், காவேரி வயிற்றில் பிள்ளையோட இருப்பது, மிகவும் risk ஆன விஷயமும் கூட.
பசுபதி போன்ற றௌடிகளோட என்னென்று நேருக்கு நேர் மோதுவது. இவங்களெல்லாம் அடிமட்ட criminal கள் அல்லவா?
காவேரி குடும்பமும், விஜேயின் குடும்பமும் சாதாரண குடும்பங்களே! இவர்களால் என்னென்று இந்த றௌடிகளைச் சமாளிக்க முடியம்?
இதற்கு மூளையைத்தான் பாவிக்க வேண்டும் காவேரி போன்றவர்கள். அதற்கு, காவேரி,
இனி, பசுபதியை, செய்யாத குற்றத்திற்கு என்னென்று தண்டனை அனுபவிக்க விட வேண்டும் என்று திட்டம் தீட்ட வேண்டும்.
காவேரி எப்படி, என்ன திட்டத்தினை வைத்து பசுபதியினை, குமரனுடன் சிறைக்குப் போய் வெருட்டினாளோ, அந்தப் பிளான்களை ஒவ்வொன்றாக execute பண்ண வேண்டியதுதான்.
இவ்வளவு காலமும் குற்றங்கள் பல செய்து, ஜெயிலுக்குப் போகாமல் வெளியில் சுற்றிக் கொண்டிருந்த காலங்களை விட, குற்றங்கள் செய்யாமல் எப்படியான தண்டனைகளை அனுபவிக்க வேண்டுமென்று காவேரி இனி ஒவ்வொன்றாகப் பசுபதிக்கு செய்து காட்டி படிப்பிக்க வேண்டும்.
அத்துடன், பசுவின் weak point ரே றாகினிதான். அவளுக்குக்குக் குடைச்சலைக் கொடுக்க வேண்டும். றாகினியில் கை வைத்தால், பசு தானாக கழுத்தை நீட்டும்.
அதுமட்டுமல்லாமல், இப்படி விறைச்சுக் கொண்டு திரிபவர்களுக்கு ஒரு weakness இருக்கும். அங்கு கை வைத்து விட வேண்டியதுதான்.
அதற்கு, எப்படியெல்லாம் மீடியாவை வைத்து கேவலப்படுத்தினானோ பசுபதி அப்படி, அதே மீடியாவை வைத்து தும்சம் பண்ணனும்.
வெளியால தலைகாட்டவிடாமல் பண்ண வேண்டும். றாகினி தலையினை விரித்து விசரி மாதிரி அலைஞ்சு திரிய வைக்க வேண்டும்.
பசுபதி எப்படியெல்லாம் சந்தானத்தைச் சுற்ற விட்டு அவ்வளவு சொத்தினையும் கொள்ளை அடித்து காவேரியின் குடும்பத்தினை றோட்டிலே விட்டானோ அவ்வாறு, பசுபதி ஆட்டையைப் போட்ட சொத்திலே காவேரி கண் வைக்க வேண்டும். அவற்றினை அழிப்பதற்கு, அவன் சுறண்டின routeனைக் கண்டுபிடித்து அழிக்க வேண்டும்.
இப்படி பசுபதிக்கு பல கோண்த்திலிருந்தும் குடைச்சலைக் கொடுத்தால் அவனுக்கு அவற்றைப் பற்றி சிந்திபதற்கே 24 மணி நேரமும் ஒரு நாளுக்குக் காணாமல், பித்துபிடித்து விசரனாக சுற்றுவான்.
இதனால், பசுபதியுடன் உள்ள அடியாட்கள் அவனை விட்டு விலகுவார்கள்.
இதற்கு ஒரு அடி ஆட்களும் காவேரி்க்குத் தேவையில்லை. ஒரு பணமும் செலவழிக்கத் தேவையில்லை. இருந்த இருப்பிலே போணின் மூலம் எல்லாவற்றினையும் காவேரி செய்யலாம்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் என்பதனையும், உங்கள் கருத்துக்களையும் Description னில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!